பிரமோத் மகாஜன்

பிரமோத் வியாங்கதேஷ் மகாஜன் ( Pramod Vyankatesh Mahajan ) (30 அக்டோபர் 1949 - 3 மே 2006) மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) இரண்டாவது தலைமுறை தலைவரான இவர் ஒப்பீட்டளவில் இளம் "தொழில்நுட்ப" தலைவர்களின் குழுவில் சேர்ந்தவர். இவர் இறக்கும் போது, பாஜகவின் தலைமைப் பதவிக்கான அதிகாரப் போட்டியில் இருந்தார்.[2]

பிரமோத் மகாஜன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
2 செப்டம்பர் 2001 – 28 ஜனவரி 2003
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்இராம் விலாசு பாசுவான்
பின்னவர்அருண் சோரி
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1999 – 29 ஜனவரி 2003
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ப. அரங்கராஜன் குமாரமங்கலம்
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
பதவியில்
16 மே 1996 – 1 ஜூன் 1996
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்குலாம் நபி ஆசாத்
பின்னவர்இராம் விலாசு பாசுவான்
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
16 மே 1996 – 1 ஜூன் 1996
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்பி. வி. நரசிம்ம ராவ்
பின்னவர்முலாயம் சிங் யாதவ்
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னையவர்குருதாஸ் காமத்
பின்னவர்குருதாஸ் காமத்
தொகுதிவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரமோத் வியாங்கதேஷ் மகாஜன்

(1949-10-30)30 அக்டோபர் 1949
மகபூப்நகர்,
ஐதராபாத்து மாநிலம், இந்திய ஒன்றியம்
(தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்பு3 மே 2006(2006-05-03) (அகவை 56)
மும்பை,
மகாராட்டிரம்,
இந்தியா
Manner of deathபடுகொலை
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேகா மகாஜன்
பிள்ளைகள்ராகுல் மகாஜன்
பூனம் மகாஜன்
வாழிடம்(s)வொர்லி, மும்பை, மகாராட்டிரம்
As of 5 மே 2006
மூலம்: [1]

இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும்]] பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் மும்பை - வடகிழக்கு தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே போட்டியிட்டார். இவர் 1996இல் வென்றார், ஆனால் 1998 இல் தோற்றார். 2001 முதல் 2003 வரை பிரதமர் அடல் பிகாரி வாச்பாயின் அரசில் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி இந்தியாவின் செல்பேசி புரட்சியில் இவர் பெரும் பங்கு வகித்தார். தனது கட்சியின் சித்தாந்தத்தைத் தாண்டி தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடனான நல்ல உறவின் காரணமாக இவர் ஒரு வெற்றிகரமான நாடாளுமன்ற விவகார அமைச்சராக பரவலாகக் காணப்பட்டார்.[3]

2006 ஏப்ரல் 22 அன்று, குடும்பத் தகராறு காரணமாக இவரது சகோதரர் பிரவின் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரவினுக்கு 2007இல் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Revathi Krishnan (3 May 2020). "Pramod Mahajan, BJP's master strategist and troubleshooter before Amit Shah". ThePrint. https://theprint.in/theprint-profile/pramod-mahajan-bjps-master-strategist-and-troubleshooter-before-amit-shah/413418/. "Pramod Mahajan was the brain behind the Shiv Sena-BJP alliance in Maharashtra and was believed to be the only person Bal Thackeray trusted in the party" 
  2. Biswas (30 December 2005). "What next for the BJP?". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4569054.stm. 
  3. "Mahajan, Shri Pramod. Biographical sketch". Rajya Sabha. Archived from the original on 30 April 2006. பார்க்கப்பட்ட நாள் 2 September 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_மகாஜன்&oldid=3712568" இலிருந்து மீள்விக்கப்பட்டது