ராகுல் மகாஜன்
ராகுல் பிரமோத் மகாஜன் (Rahul Pramod Mahajan) (பிறப்பு 25 ஜூலை 1975) உண்மைநிலை நிகழ்ச்சியில் பங்கேற்றவரும், முன்னாள் விமானியுமாவார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகன். இவர் பிக் பாஸ் என்ற உண்மை நிலை நிகழ்ச்சியின் பருவம் 2இல் போட்டியாளராக தோன்றினார். மீண்டும் பிக் பாஸ் ஹல்லா போல், பிக் பாஸ் 14 இல் சக போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்தார்.
ராகுல் மகாஜன் | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1975 இலோலா அரண்மனை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | பட்டதாரி |
பணி | பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008-தற்போது வரை |
பெற்றோர் | பிரமோத் மகாஜன் ரேகா மகாஜன் |
வாழ்க்கைத் துணை | சுவேதா சிங் (2006–2008) திம்பி கங்குலி (2010–2015) நடால்யா இலினா (2018)[1] |
உறவினர்கள் | பூனம் மகாஜன் |
தொழில்
தொகுராகுல், 2008இல் பிக் பாஸ் பருவம் 2இல் பங்கேற்றார். இவர் பருவத்தின் இறுதிப் போட்டியாளராக இருந்தார். ஆனால் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேற சுவரில் ஏறினர்.[2] ராகி கா சுயம்வர் என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியான ராகுல் துல்ஹானியா லே ஜாயேகா என்ற நிகச்சியில் இவர் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு சுயம்வரமாக இருந்தது. அங்கு இவரது மணமகள் உட்பட 17 பெண்கள் பங்கேற்றனர். இவர் 25 வயதான பெங்காலி விளம்பர நடிகையான திம்பி என்கிற கங்குலியை 6 மார்ச் 2010 இல் திருமணம் செய்து கொண்டார்.[3] இவரும் இவரது மனைவியும் சேர்ந்து நாச் பாலியே என்ற நிகழ்ச்சியின் பருவம் 5இல் பங்கேற்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இருவரும் பங்கேற்றனர். ஆனால் இருவரும் இறுதியில் வெளியேற்றப்பட்டனர்.[4]
சொந்த வாழ்க்கை
தொகுராகுல் மகாஜன் முன்னாள் மத்திய அமைச்சரவை அமைச்சர் பிரமோத் மகாஜன்- ரேகா மகாஜனின் மூத்த மகனாவார்.[5] இவரது சகோதரி பூனம் மகாஜன் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.[6]
திருமணம்
தொகுஜூலை 2006 இல், அமெரிக்காவில் பறக்கும் பள்ளியில் ஒன்றாக இருந்த தனது 13 ஆண்டுத் தோழியான சுவேதா சிங்குடன் திருமணம் நடந்தது. ஆனால், இரு தரப்பினரின் இணக்கமின்மை காரணமாக 1 ஆகஸ்ட் 2008 அன்று, இவர்களுக்கு குருகிராம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.[7]
2010 இல், இவர் திம்பி கங்குலியை ஒரு உண்மைநிலை நிகழ்ச்சியின் முடிவில் மணந்தார். இருப்பினும், இந்தத் திருமணமும் இவருக்கு தோல்வியில் முடிந்தது.[8]
ராகுல் மகாஜன் 20 நவம்பர் 2018 அன்று உருசிய கசக்கியாரும் விளம்பர நடிகையுமான நடால்யா இலினா என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rahul Mahajan gets married to model Natalya Ilina from Kazakhstan". Mumbai Mirror. 22 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bigg Boss throwback: When Rahul Mahajan fled the house and refused to apologise".
- ↑ "Rahul Mahajan ties knot with Dimpy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 March 2010. Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010.
- ↑ "Dolly Bindra approached for Nach Baliye!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
- ↑ "Rahul punched, kicked me: Dimpy". The Times of India. 30 July 2010. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Rahul-punched-kicked-me-Dimpy/articleshow/6235699.cms. ""This is not the first time Rahul, son of late Bharatiya Janata Party leader Pramod Mahajan, has been accused of domestic violence.""
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.
- ↑ Ayesha Arvind (3 August 2008). "Day after divorce, Shweta says don't want any money from Mahajan". The Indian Express. Archived from the original on 27 August 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2010.
- ↑ "Rahul punched, kicked me: Dimpy". The Times of India. 30 July 2010. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Rahul-punched-kicked-me-Dimpy/articleshow/6235699.cms. ""This is not the first time Rahul, son of late Bharatiya Janata Party leader Pramod Mahajan, has been accused of domestic violence.""
- ↑ https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/bigg-boss-fame-rahul-mahajan-and-wife-natalya-ilina-off-for-a-mini-honeymoon-see-pics/articleshow/67574019.cms