சிவராஜ் சிங் சௌகான்

இந்திய அரசியல்வாதி
(சிவ்ராஜ் சிங் சௌஃகான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிவ்ராஜ் சிங் சௌஃகான் (Shivraj Singh Chouhan ,இந்தி: शिवराज सिंह चौहान) (பிறப்பு 5 மார்ச்சு 1959) இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் மாநில தலைவராகவும் இருந்த சௌகான் 29 நவம்பர் 2005ஆம் ஆண்டில் முதல்முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சிவ்ராஜ் சிங் சௌஃகான்
Shivraj Singh Chauhan.jpg
மத்தியப் பிரதேச முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மார்ச் 2020
தொகுதி புத்னி
பதவியில்
29 நவம்பர் 2005 – 12 டிசம்பர் 2018
தனிநபர் தகவல்
பிறப்பு 5 மார்ச்சு 1959 (1959-03-05) (அகவை 64)
சேகோர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சி பாஜக
வாழ்க்கை துணைவர்(கள்) சாதனா சிங் சௌகான்
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் போபால்
As of செப்டம்பர் 22, 2006
Source: [1]

பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் ஊரில் மார்ச்சு 5, 1959 அன்று பிறந்தவர்.1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்து இரு மகன்கள் உள்ளனர். சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர்.

1972ஆம் ஆண்டு ராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் விதிசா மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தற்போது அவரது பிறந்த மாவட்டமான சேகோரில் உள்ள புத்னி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2008ஆம் ஆண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் வென்று இரண்டாம் முறையாக மாநில முதலமைச்சராக 12 திசம்பர்,2008 அன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு


வெளியிணைப்புகள்தொகு

முன்னர்
பாபுலால் கௌர்
மத்தியப் பிரதேச முதலமைச்சர்
2005 –
பின்னர்
தற்போதைய ஆட்சியாளர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராஜ்_சிங்_சௌகான்&oldid=3578879" இருந்து மீள்விக்கப்பட்டது