ராம ஜென்ம பூமி

ராமர் பிறந்தார் என கூறப்படும் இடங்களில் இதுவும் ஒன்று

இராம ஜென்ம பூமி, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தின், அயோத்தியில் இராமர் பிறந்தார். இப்பகுதியே இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், சரயு ஆற்றின் கரையில் உள்ள கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக பிறந்தார் என இராமாயணம் எனும் இதிகாசத்தில் விளக்கப்பட்டுள்ளது. முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ராம ஜன்ம பூமியும் ஒன்று. இங்கு குழந்தை இராமர் கோயில் அமைந்துள்ளது.

இராம ஜென்ம பூமி
இருப்பிடம்அயோத்தி
பகுதிஉத்தரப் பிரதேசம்
ஆயத்தொலைகள்26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943
பகுதிக் குறிப்புகள்
உரிமையாளர்உத்தரப் பிரதேச அரசு

இராம ஜென்மபூமி உத்திரப் பிரதேசத்தின், பைசாபாதிலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும், லக்னோவிலிருந்து கிழக்கே 136 கிலோ மீட்டர் தொலைவில், சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.

மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், இங்கிருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528-இல் தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. ,[1][2] மேலும், முகலாய மன்னர் பாபர் 1528ல் தனது படை தளபதியை வைத்து வாங்கி பள்ளிவாசல் கட்டியதாக கூறப்படுகிறது. 1528 முதல் 1853 வரை இசுலாமியர்களின் தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தது.[3]

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியா அரசினர், 1863 முதல் 1949 முடிய இவ்விடத்தில் இந்துக்களும் இசுலாமியர்களும் வழிபட வேண்டும் என கூறி இவ்விடத்தை இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து அவ்விடத்தில், இந்துக்கள் வழிபடக்கூடிய இராமர் சிலையை வைத்து விட்டு அங்கு இராமர் கோவிலை கட்ட வேண்டும் எனக்கூறி வருகிறது. முஸ்லிம்கள் அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் என்று போராடி வருகின்றனர்

தொல்லியல் அகழ்வாராய்வு

தொகு

இந்தியத் தொல்லியல் துறையினர் பிரச்சினைக்குரிய, இராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தையும், பாபர் மசூதி இருக்கும் நிலத்தையும் 1970, 1992 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்ததில், பாபர் மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கட்டிடங்கள், பாபர் மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டெடுத்தனர்.[4]

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

தொகு

பிரச்சினைக்குரிய இராம ஜன்ம பூமி – பாபர் மசூதி இடம் குறித்து செப்டம்பர் 30, 2010 இல் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய மேற்படி 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து, தற்போது குழந்தை இராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ஒரு பகுதியாகவும், சன்னி வக்ஃப்போர்டு அமைப்புக்கு மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும்[5], நிர்மோகி அகாரா அமைப்புக்கு மீதி உள்ள நிலத்தையும் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[6]அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேற்படி மூன்று அமைப்புகளும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தொகு

ஜனவரி 27, 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பகுதிகளை ஏற்கனவே உள்ளது உள்ளபடி (status quo) மாநில அரசு நிர்வாகிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இராம ஜன்மபூமி மற்றும் பாபர் மசூதி குறித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல மேல்முறையீடு வழக்குகள் நிலுவை உள்ளதால், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.[7]

சமரசக் குழு

தொகு

8 மார்ச் 2019 அன்று ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இராம ஜென்ம பூமி பிணக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே, பைசாபாத் நகரத்தில் தங்கியிருந்து அயோத்தி பிரச்சினையை சமரசம் செய்து கொள்ளும் வகையில் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், மூத்த வழக்கறிஞர் சிறீராம் பஞ்சு மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியவர்களைக் கொண்ட ஒரு சமரசக்குழவை நியமித்துள்ள்து. இக்குழு எட்டு வாரங்களுக்குள் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.[8][9][10]

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

தொகு

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. ஆகையால் நிர்மோகி அகாரா, மற்றும் சுன்னி வக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும், சன்னி வக்ப் வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசுக்கே உரிமை என்றும், ராம ஜென்ம பூமியில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் குழந்தை இராமருக்கு கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[11][12][13][14][15]

இராமர் கோயில் கட்ட பூமிபூசை மற்றும் அடிக்கல் நாட்டுதல்

தொகு
 • பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5ஆம் நாள், இராமர் கோயில் கட்ட பூமிபூசை நடத்தப்பட்டது; மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இவற்றையும் காண்க

தொகு

மேற்குறிப்புகள்

தொகு
 1. "Allahabad High Court". http://elegalix.allahabadhighcourt.in/elegalix/ayodhyafiles/hondvsj-gist-vol2.pdf. 
 2. "Proof of temple found at Ayodhya: ASI report". Rediff.com. 25 August 2003. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.
 3. "The Ayodhya dispute: A timeline". Ndtv.com. 27 September 2010. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
 4. http://www.rediff.com/news/2003/aug/25ayo1.htm
 5. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=40473 பரணிடப்பட்டது 2010-10-02 at the வந்தவழி இயந்திரம் நக்கீரன் இதழ்
 6. "Disputed Ayodhya site to be divided into 3 parts- TIMESNOW.tv – Latest Breaking News, Big News Stories, News Videos". Timesnow.Tv. Archived from the original on 11 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "SC reiterates status quo on Ayodhya's Ram Janmabhoomi-Babri Masjid site". பார்க்கப்பட்ட நாள் 10 Oct 2013.
 8. SC sends Ayodhya dispute for mediation in camera
 9. mediation for Ayodhya dispute
 10. அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள்
 11. அயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் - பிபிசி
 12. அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்
 13. அயோத்தி:சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்குச் சொந்தம்; முஸ்லீம்களுக்கு மாற்று இடம் - பி பி சி - தமிழ்
 14. "அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்:உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு". Archived from the original on 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09. தினமணி (09 நவம்பர்,2019)
 15. "அயோத்தியில் ராமர் கோவில் - இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் - உச்சநீதிமன்றம்". NEWS18 தமிழ் (09 நவம்பர், 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம_ஜென்ம_பூமி&oldid=3873999" இலிருந்து மீள்விக்கப்பட்டது