சரயு

இந்திய ஆறு

சரயு (Sarayu; தேவநாகரி: सरयु) என்பது இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் பகராயிச் மாவட்டத்தில் கர்னாலி (ககாரா), சாரதா (மகாகாளி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகிறது. சாரதா நதி இந்திய-நேபாள எல்லையை உருவாக்குகிறது. அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.[1]

சரயு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கங்கை ஆற்றின் கிளை
நீளம்350 கிமீ

இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்.[2] இராமர் இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரயு&oldid=3658582" இலிருந்து மீள்விக்கப்பட்டது