அயோத்தி மாவட்டம்

(பைசாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயோத்தி மாவட்டம் முன்னர் இதன் பெயர் பைசாபாத் மாவட்டம் என இருந்தது. பைசாபாத் மாவட்டத்தின் பெயரை, அயோத்தி மாவட்டம் என மாற்றப்படுவதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 6 நவம்பர் 2018 அன்று அறிவித்தார்.[1][2][3][4][5][6] [7][8][9]

அயோத்தி மாவட்டம் மாவட்டம்
அயோத்தி மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அயோத்தி கோட்டம்
தலைமையகம்அயோத்தி
பரப்பு2,522 km2 (974 sq mi)
மக்கட்தொகை2470996 (2011)
படிப்பறிவு70.63 %
பாலின விகிதம்961
வட்டங்கள்5
மக்களவைத்தொகுதிகள்1 பைசாபாத்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 அயோத்தி தீர்ப்பு
அயோத்தி புதிய மசூதி
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

அயோத்தி கோட்டத்தில் அமைந்த அயோத்தி மாவட்டத்தின் தலைமையகம் சரயு ஆற்றின் கரையில் அமைந்த அயோத்தி மாநகராட்சியில் உள்ளது. இந்த மாவட்டம் 2,522 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. அயோத்தி மாவட்டத்தின் பெரிய நகரமான பைசாபாத் நகரத்தில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கலைகழகம் அமைந்துள்ளது.

மக்கள் தொகை தொகு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 24,70,996 மக்கள் வாழ்ந்தனர். அதில் ஆண்கள் 12,59,628 மற்றும் பெண்கள் 12,11,368 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,60,082 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். ச்ராசரி எழுத்தறிவு 68.73% ஆகவுள்ளது. அயோத்தி மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 20,94,271 (84.75%), இசுலாமியர்கள் 3,65,806 (14.80%) மற்றும் பிற சமயத்தவர்கள் 0.45% ஆக உள்ளனர்.[10] அயோத்தி மாவட்ட மக்கள் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தொகு

2522 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அயோத்தி மாவட்டம், 5 வருவாய் வட்டங்களும், 11 ஊராட்சி ஒன்றியங்களையும், 2 மாநகராட்சிகளையும், 1272 கிராமங்களையும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள் தொகு

  1. சதர் வட்டம்
  2. சோகாவால் வட்டம்
  3. பிகாப்பூர் வட்டம்
  4. மில்க்கிபூர் வட்டம்
  5. ருதௌலி வட்டம்

மாநகராட்சிகள் தொகு

ஊராட்சி ஒன்றியங்கள் தொகு

அயோத்தி மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:

  1. மசோதா
  2. சோகாவால்
  3. பிகாப்பூர்
  4. மில்க்கிபூர்
  5. மாயாபஜார்
  6. பூராபஜார்
  7. ஹரிசிங்டோன்கஞ்ச்
  8. அமனிகஞ்ச்
  9. தருண்
  10. மாவாய்
  11. ருதௌலி

கல்வி தொகு

தொடருந்து வசதிகள் தொகு

பைசாபாத் தொடருந்து நிலையம்
அயோத்தி தொடருந்து நிலையம்

பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் தொகு

6 நடைமேடைகளுடன் கூடிய பைசாபாத் தொடருந்து நிலையம் கான்பூர், லக்னோ, வாரணாசி, அலகாபாத், மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களுடன் இணைக்கிறது. [11]

அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம் தொகு

3 நடைமேடைகளுடன் கூடிய அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம், கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. [12]

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_மாவட்டம்&oldid=3616663" இருந்து மீள்விக்கப்பட்டது