கோரக்பூர்

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)


கோரக்பூர் (Gorakhpur, இந்தி: गोरखपुर) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் நேபாளத்தின் எல்லையில் உள்ள ஓர் நகரமாகும். இது கோரக்பூர் கோட்டம் மற்றும் கோரக்பூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். கோரக்பூர் பல பௌத்த, இந்து, முசுலிம் மற்றும் சமணத் துறவிகளின் இருப்பிடமாக சமயத்துறையில் புகழ்பெற்ற நகரமாகும். இந்துத் துறவி கோரக்சாநாத் பெயரிலேயே இந்த நகரமும் பெயரிடப்பட்டுள்ளது. இன்றும் நாத் இன மக்களுக்கு இங்குள்ள கோரக்நாத் கோவில் ஆதாரபீடமாகும். இந்த நகரில் வரலாற்றுச் சிறபுமிக்க பௌத்த தலங்கள், 18ஆம் நூற்றாண்டு இமாம்பரா உள்ளன. இந்து சமயநூல்களை வெளியிட்டு புகழ்பெற்றுள்ள கீதா பிரஸ் இங்குள்ளது.

கோரக்பூர்
—  நகரம்  —
கோரக்பூர்
இருப்பிடம்: கோரக்பூர்

, உத்தரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 26°33′0″N 83°9′0″E / 26.55000°N 83.15000°E / 26.55000; 83.15000
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கோரக்பூர்
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி கோரக்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

37,69,456 (2001)

1,082/km2 (2,802/sq mi)

பாலின விகிதம் 1000/959 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3,483.8 சதுர கிலோமீட்டர்கள் (1,345.1 sq mi)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்


     26 °C (79 °F)
     40 °C (104 °F)
     18 °C (64 °F)

குறியீடுகள்
இணையதளம் gorakhpur.nic.in

இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலை இயக்கத்தில் முதன்மை பங்கு வகித்தது. இந்திய இரயில்வேயின் வட கிழக்கு இரயில்வேயின் தலைமையகமாக விளங்குகிறது. பழைய நகர்ப்பகுதியிலிருந்து 15 கிமீ தொலைவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோரக்பூர் தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தொழிற்பேட்டை தொழில் வளர்ச்சிக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது.

புகழ் பெற்றவர்கள்

தொகு

மாவட்ட புள்ளிவிவரங்கள்

தொகு
  • புவியியல் பகுதி 3,483.8 கிமீ2
  • மொத்த மக்கள்தொகை(2009) 10,61,428
  • பாலின விகிதம் (2001) 1000 /959
  • ஊரக மக்கள்தொகை ( 69.40% ) (2001) 3,030,865
  • நகர்ப்புற மக்கள்தொகை ( 30.60% ) (2001) 738,591
  • மொத்த படிப்பறிவு ( 41.89% ) (2009) 4,44,632 (ஏறத்தாழ).

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரக்பூர்&oldid=3265725" இலிருந்து மீள்விக்கப்பட்டது