சிறீராம் பஞ்சு
சிறீராம் பஞ்சு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சிக்கலான பல பெருநிறுவனங்களின் வழக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து சமரசம் செய்து தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர் ஆவார். மூத்த வழக்கறிஞரான இவர், நீதி மற்றும் சட்ட விஷயங்களுடன் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமையானவர் என பெயர் பெற்றவர். மத்தியஸ்தம் தொடர்பான 2 நூல்களை எழுதியுள்ளார். பல ஆண்டுளாக மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவி வருகிறார்.
ராம ஜென்ம பூமி சமரசக் குழு உறுப்பினராக
தொகுமுன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி (அயோத்தி) சமரசக் குழுவின் உறுப்பினர்களாக சிறீராம் பஞ்சு மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்வை, இந்திய உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.[1][2][3] இந்த சமரசக்குழு இராம ஜென்ம பூமி பிணக்குகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இரகசியமாக அறைக்குள் வைத்து விசாரித்து, எட்டு வாரங்களுக்குள் அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு சமப்ப்பிக்க வேண்டும். இச்சமரசப் பேச்சு வார்த்தைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் வெளியிட உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சிறீராம் பஞ்சுவின் வலைதளம் பரணிடப்பட்டது 2019-09-16 at the வந்தவழி இயந்திரம்