இந்திய உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் தலைமை நீதிமன்றம்
(இந்திய உச்சநீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றம்
Supreme Court of India
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம். [1][2][3]
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1937; 86 ஆண்டுகள் முன்னர் (1937-10-01)
(இந்தியாவின் கூட்டு நீதிமன்றம்)
28 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-28)
(இந்திய உச்ச நீதிமன்றம்)[4]
அமைவிடம்புது தில்லி
புவியியல் ஆள்கூற்று28°37′20″N 77°14′23″E / 28.622237°N 77.239584°E / 28.622237; 77.239584
குறிக்கோளுரைयतो धर्मस्ततो जयः॥
அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.
நியமன முறைநிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்தியக் குடியரசுத் தலைவர் (தூக்கு தண்டனை உட்பட தண்டனையை நீக்க மட்டும்)
நீதியரசர் பதவிக்காலம்65 அகவை
இருக்கைகள் எண்ணிக்கை34 (33+1)
வலைத்தளம்supremecourtofindia.nic.in
இந்தியத் தலைமை நீதிபதி
தற்போதையதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
பதவியில்9 நவம்பர் 2022 முதல்

இஃது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும் மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950-இல் தொடங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது .

நீதிமன்ற கட்டமைவு

தொகு
 
இந்திய உச்ச நீதிமன்றம்- மைய மண்டபம்

சனவரி 26, 1950-இல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் தொடங்கி, தொடக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது.

1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958 வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது.

தொடக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958-இல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்போதைய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக்.

உச்ச நீதிமன்ற கட்டுமானம்

தொகு

இதன் தற்பொழுதைய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை

தொகு

1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது.

அமர்வு

தொகு

சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது.

இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது.

தேர்வு குழு

தொகு

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையை மத்திய அரசு பழைய முறையை விட்டு புதிதாக கொலீஜியம் என்ற ஒரு முறையை 13 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2014 ஆம் ஆண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் கொண்டு வந்தது. ஆனால் அந்த முறையை இந்திய உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது [5]

ஒய்வு

தொகு

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்

தொகு

இவர்களின் தகுதியாவன: இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.

பெண் நீதிபதிகள்

தொகு

முதல் பெண் நீதிபதியாக எம். பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர். நீதிபதி பாத்திமா பீவி ஓய்வு பெற்ற பிறகு அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ‘‘பெண்களுக்கு இதுநாள் வரை மூடப்பட்ட கதவை நான் திறந்தவளானேன்’’ என்று கூறியிருந்தார்.

2023 இல் உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் மூவர் மட்டுமே பெண்கள். உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 256 பேரில் 11 பேர் மட்டுமே பெண்கள் (4.2%).[6]

முதல் பட்டியல் வகுப்பினர்‌ நீதிபதி

தொகு

மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்தான் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் பட்டியல் சமூகத்தவர்.

முதல் பட்டியலின வகுப்பு தலைமை நீதிபதி

தொகு

2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் பட்டியலின வகுப்பு தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர்.

தலைமை நீதிபதி பதவி வகிக்காமல் சட்ட ஆணையத் தலைவர்களாக பதவி ஏற்றவர்கள்

தொகு

முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

தொகு

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[7] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

நடுவண் அரசு வழக்குரைஞர்

தொகு

இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.

தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி [8]. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.

நீதிபரிபாலனம்

தொகு

உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபரிபாலனங்களைக் கையாள்கின்றது. மூல நீதிபரிபாலனம், மேல்முறையீட்டு நீதிபரிபாலனம் மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலனம்.

மூல நீதிபரிபாலனம்

தொகு

இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது.

அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) , தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலனத்தைக் கொண்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிபரிபாலனம்

தொகு

உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துரைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலனத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது.

ஆலோசனைக்குழு நீதிபரிபாலனம்

தொகு

இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலனத்தைப் பெற்றுள்ளது.

தன்னாட்சி பெற்ற நீதிமன்றம்

தொகு

இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிபெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை.

உச்ச நீதிமன்ற வரலாற்றுத் தீர்ப்புக்கள

தொகு

நிலச்சீர்த்திருத்த சட்டம் 9 (முந்தைய அணுகுமுறை)

தொகு

பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது.

அரசியலமைப்புக்கு எதிரானவையாக உச்ச நீதிமன்றம் கருதிய ஏனைய சட்டங்கள்

தொகு
  • பிப்ரவரி 1, 1970, அன்று உச்ச நீதிமன்றம் செல்லாததாக்குகின்ற சட்டமாக, அரசு உதவி பெறும் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற சட்டம் நாடளுமன்றத்தால் ஆகஸ்டு, 1969, இல் நிறைவேற்றியபின் இத்தீர்ப்பினை வழங்கி செல்லாத சட்டமாக்கியது.
  • செப்டம்பர் 7, 1970, இல் வழங்கிய குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கிய ஆணையான, இந்தியாவின் முந்தைய (பிரித்தானிய) ஆட்சியில் பேரரசு இளவரசரின் பெயரால் வழங்கப்பெற்ற பட்டயம், சலுகைகள், பரிசுகளை இரத்து செய்யும் ஆணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த்து.

நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டணையளிக்கும் அதிகாரம்

தொகு

அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக்[9] முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார்.

நீதிபதிகளின் நன்னடத்தையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு

தொகு

இந்தியாவின் உயரிய நீதிமுறைமை ,[10][11][12][13][14][15][16][17][18][19][20][21][22][23][24][25][26][27] 2008,ஆம் ஆண்டு சந்திதித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு[28] இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக[29][30][31][32][33] இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவி குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன: "நீதிபதி என்பவர் பொது ஊழியரல்லர் [34] அவர் ஒரு அரசியலமைப்பின் பொறுப்பாளர். பின்னர் தான் வெளிப்படுத்தியக் கருத்திலிருந்து விலகிக் கொண்டார்[35]

நீதிமுறைமை கடமைத் தவறியனவாக[36] தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது.

பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்[37]

பதவி இறக்க

தொகு

உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

தேசிய நீதிபரிபாலன மன்றம்

தொகு

இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலன மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "SUPREME COURT OF INDIA" (PDF). main.sci.gov.in.
  2. "Supreme Court of India, administrative document" (PDF). Archived from the original (PDF) on 2022-07-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
  3. Wagner, Anne; Marusek, Sarah (24 May 2021). Flags, Color, and the Legal Narrative: Public Memory, Identity, and Critique (in ஆங்கிலம்). Springer Nature. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-32865-8. A slightly different (32-spoke) version of the same wheel adorns the logo of the Supreme Court of India as a visual declaration of righteouness, authority and truth
  4. "History of Supreme Court of India" (PDF). Supreme Court of India. Archived from the original (PDF) on 22 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2014.
  5. [1] தி இந்து தமிழ் பார்த்த நாள் 19 அக்டோபர் 2015
  6. "தொலை தூரமாய் இருக்கும் நீதித்துறையில் பாலின சமத்துவம் - ச.சிவக்குமார்". Theekkathir. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  7. உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
  8. அட்டர்னி ஜெனரால் இணையம் பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
  9. நீதிமன்ற அவமதிப்பால் மகாராஷ்டிரா அமைச்சர் சிறை
  10. யோகேஷ் குமார் சபர்வால்
  11. முன்னாள்.தலைமை.நீதிபதியின் ஒழுக்கக்கேடு பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம், இந்துஸ்தான் டைம்ஸ், புது தில்லி, ஜூன் 09,2008
  12. கஜிதாபாத் பி.எப் முறைகேடு வழக்கில் நீதிமுறைமை புலன் விசாரணக்குள்ளானது பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம், இந்துஸ்தான் டைம்ஸ், புது தில்லி, July 07,2008
  13. கருப்பு ஆடுகள் நீதிமுறைமையிலும், உச்ச நீதிமன்றத்திலும் அனுமதிக்கப்பட்டது பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம், நெர்வ் நியூஸ் இந்தியா
  14. கருப்பு ஆடுகள் நீதிமுறைமையிலும், உச்ச நீதிமன்றத்திலும் அனுமதிக்கப்பட்டது பரணிடப்பட்டது 2013-06-02 at the வந்தவழி இயந்திரம், ஆகஸ்டு 06, 2008
  15. உ.நீ.ம.நீதிபதி உ.பி பிராவிடன்ட் பண்ட் ஊழல் வழக்கை கைவிட்டார், எக்கானமிக் டைம்ஸ், 8 ஆகஸ்டு, 2008
  16. பி.எப் முறைகேடு: உச்ச நீதிமன்ற நீதிபதி, பதவியேற்றபின் விசாரணையை கைவிட்டார், பிசினஸ் ஸ்டான்டர்டு, ஆகஸ்டு 9, 2008
  17. உச்ச நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய நீதிமுறைமையை குறித்த மோசடி வழக்கு விசாரணையை கைவிட்டது, யாகூ இந்தியா செய்திகள், ஆகஸ்டு 7, 2008
  18. உச்ச நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய நீதிமுறைமையை குறித்த மோசடி வழக்கு விசாரணையை கைவிட்டது பரணிடப்பட்டது 2016-04-01 at the வந்தவழி இயந்திரம், ஆகஸ்டு 7, 2008
  19. ஒசை மற்றும் ஒங்காரமும் உ.நீ.ம.: நீதிபதி பி.எப் வழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் பரணிடப்பட்டது 2009-03-29 at the வந்தவழி இயந்திரம், டைம்ஸ் ஆப் இந்தியா, 8 ஆக 2008
  20. முதல் அவமானம்: (ம.அ.பி)சி.பி.ஐ 2 உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரித்த்து பரணிடப்பட்டது 2014-08-31 at the வந்தவழி இயந்திரம், ஐ.பி.என் நேரடி, செப்டம்பர் 09, 2008
  21. இந்தியவில், கடவுள் கூட செயலற்றவர், உச்ச.நீ.ம கூறியவை, டைம்ஸ் ஆப் இந்தியா, 5 ஆகஸ்டு 2008
  22. கடவுளால் கூட இந்நாட்டை காப்பாற்ற முடியாது: உச்ச.நீ, பிசினஸ் ஸ்டான்டர்ட், ஆகஸ்டு 09, 2008
  23. கடவுளால் கூட இந்நாட்டை காப்பாற்ற முடியாது: உச்ச.நீ! பரணிடப்பட்டது 2013-06-23 at the வந்தவழி இயந்திரம், I நியூஸ் இந்தியா, ஆகஸ்டு 05, 2008
  24. கடவுளால் கூட இந்நாட்டை காப்பாற்ற முடியாது: உச்ச.நீ கூறியவை, யாகூ இந்தியா நியூஸ், ஆகஸ்டு 05, 2008
  25. நீதிமுறைமை ஒழுக்கக்கேடு எரிபொருள் இழப்பிலிருந்து விலக்கு, சட்டத்தை அரிக்கின்றவை[தொடர்பிழந்த இணைப்பு], பன்னாட்டு ஒளிவுமறை வின்மை, பத்திரிகை வெளியீடு, 24 மே, 2007
  26. "இந்தியாவின் நீதிமுறைமையில் சோம்பல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  27. இந்தியாவில் ஊழல் நீதிபதிகள், மின் –மனித உரிமையின் குரல் பார்க்கவும்– மின்-செய்திகள் வாரமொருமுறை பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம், 21 ஜூலை 2007
  28. நீதிமுறைமை பொறுப்பு, மே 2008
  29. இந்திய நீதிபதிகள் எதையோ மறைக்க விரும்புகிறார்களா? யூ.பி.ஐ ஆசியா.காம், மே 13, 2008
  30. உச்ச.நீ.ம.நீதிபதி ஆர்.டி,ஐ கீழ் வருகின்றரா?(RTI) பரணிடப்பட்டது 2008-06-23 at the வந்தவழி இயந்திரம், என் டி டி வி.காம், ஏப்ரல் 19, 2008
  31. ஆர்.டி.ஐ சட்டம் என் அலுவலகத்துக்குப் பொருந்தாது: உச்ச.நீ.ம.த.நீ, தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஏப்ரல் 20, 2008
  32. நீதிமுறைமை ஆர்.டி.ஐ யின் கீழ் வருமா செயல் எல்லை?, குழு அறிக்கை, தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 30, 2008
  33. நீதிபதிகளின் பொறுப்புடைமை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் வருகின்றதா என்பது வாததத்துக்குரியவை-உச்ச.நீ.ம.நீ கூறியவை[தொடர்பிழந்த இணைப்பு], சென்னை ஆன்லைன், புது தில்லி, மே 10, 2008
  34. உச்ச நீ.ம.த.நீதிபதி என்பவர் ஒரு பொது ஊழியரா?, தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஏப்ரல் 22, 2008
  35. [http://timesofindia.indiatimes.com/articleshow/3013416.cms நான் ஒரு பொது ஊழியன்"
  36. காலந்தாழ்ந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்ஃ: பிரதீபா பரணிடப்பட்டது 2013-01-03 at Archive.today, தி டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 24, 2008
  37. மன்மோகன் சிங் நீதிமுறைமையின் ஒழுக்கக்கேடுகள் குறித்து அதனை களைய அறைகூவல் விடுத்தார் பரணிடப்பட்டது 2018-08-20 at the வந்தவழி இயந்திரம், தாய் இன்டியன் நியூஸ், ஏப்ரல் 19, 2008

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Supreme Court of India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உச்ச_நீதிமன்றம்&oldid=4056456" இலிருந்து மீள்விக்கப்பட்டது