இசுமிருதி இரானி
இசுமிருதி இரானி (ਸਮ੍ਰਿਤੀ ਈਰਾਨੀ) திருமணத்திற்கு முன்பு: இசுமிருதி மல்ஃகோத்ரா, மாற்று ஒலிப்பு:ஸ்மிருதி இரானி, Smriti Irani née Malhotra, பிறப்பு: 23 மார்ச் 1976) முன்னாள் ஒப்புருவாளரும் தொலைக்காட்சி நடிகையும் தயாரிப்பாளரும் தற்போதைய அரசியல்வாதியும் ஆவார்.[2]பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக 2019 முதல் 2024 வரை இருந்தார். முன்னர் இவர் மனித வள மேம்பாட்டு வளம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அமைச்சகத்தின் அமைச்சராக 2014 - 2019 வரை பதவி வகித்தவர்.[3][4] 2019 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்தார். அமேதி தொகுதி நான்கு தசாப்தங்களாக ராகுல் காந்தியின் குடும்பத்தினர் வெற்றிபெற்ற தொகுதியாகும். சுமிதி ராணி 2011 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் பேசும் திறனுடையவர் ஆவார்.
இசுமிருதி இரானி | |
---|---|
2023 இல் இரானி | |
ஒன்றிய அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 26 மே 2014 – 5 சூன் 2024 | |
6 சூல் 2022 – 5 சூன் 2024 | சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) |
31 மே 2019 – 5 சூன் 2024 | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் |
5 சூலை 2016 – 7 சூலை 2021 | ஜவுளி அமைச்சகம், இந்தியா |
18 சூல் 2017 – 24 மே 2018 | தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் |
26 மே 2014 – 5 சூலை 2016 | கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா) |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
முன்னையவர் | இராகுல் காந்தி |
பின்னவர் | கிசோரி லால் சர்மா |
தொகுதி | அமேதி, உத்தரப் பிரதேசம் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 19 ஆகத்து 2011 – 23 மே 2019 | |
முன்னையவர் | பிரவின் நாயக் |
பின்னவர் | ஜுகல்ஜி தாக்கூர் |
தொகுதி | குசராத்து |
பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் | |
பதவியில் 24 சூன் 2010 – 24 ஏப்ரல் 2013 | |
முன்னையவர் | சுமித் |
பின்னவர் | சரோஜ் பாண்டே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இசுமிருதி மல்கோத்ரா 23 மார்ச்சு 1976[1] புது தில்லி, தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுபின் இரானி (தி. 2001) |
பிள்ளைகள் | 3 |
வாழிடம்(s) | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
வேலை |
|
இளமையும் கல்வியும்
தொகுதில்லியில் பஞ்சாபி–வங்காள குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவராகப் பிறந்தார்.[5][6] ஒப்புருவாளராக புகழ்பெறத் தொடங்கும் முன்னர் மக்டொனால்ட்சில் சேவையாளராகப் பணியாற்றியிருக்கிறார்.[5][6]
புனித சிசு ஆக்சிலியம் பள்ளியில் 12வது வகுப்பு வரை கல்வி பெற்றவர் பின்னர் மேற்படிப்பைத் தொடரவில்லை.[7][8]
சர்ச்சை
தொகுகோவாவில் உள்ள பேபின்டியா (Fabindia) என்ற கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததாக புகார் செய்தார்.[9]
2024 மக்களவைத் தேர்தல்
தொகு2019இல் அமேதியில் இராகுல் காந்தியை 292973 வாக்குகளில் தோற்கடித்த இவர் 2024 தேர்தலில் கிசோரி லாலிடம் தோற்றார்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்கு | வாக்கு % |
---|---|---|---|
கிசோரி லால் | காங்கிரசு | 539228 | 54.99 |
இசுமிருதி இரானி | பாசக | 372032 | 37.94 |
நாகே சிங் சௌகான் | பகுசன் சமாச் கட்சி | 34534 | 3.52 |
விருதுகள் மற்றும் பன்னாட்டு மாநாடுகள்
தொகுஇரானி, 2015ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தால் இந்தியாவின் இளம் உலகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த காலத்தில் இந்த விருது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா, யாஹூ செயல் தலைவர் மரிசா, கூகுள் தலைவர் லாரி பேஜ், இத்தாலிய பிரதமர் மேட்டியோ ரென்சி போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[10] பாராளுமன்ற ஒன்றியத்தின் 126வது சட்டமன்றத்தில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது குழுவை நிறுவுவதற்கு பொறுப்பான பணிக்குழுவிற்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இரானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
3 ஆண்டுகளாக உலக சுகாதார நிறுவனத்தின் ஓ. ஆர். எசு. திட்டத்திற்காக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகளின் நிதியத்தின் நல்லெண்ண தூதராக இரானி இருந்தார்.[12][13] 2019ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் வெற்றி பெற்றதற்காக "களத்தினை மாற்றிய பெண்கள்" என்ற கருப்பொருளின் கீழ் பெமினாவின் அதிகாரப் பட்டியலில் இரானியின் பெயர் பட்டியலிடப்பட்டது.[14]
புத்தகங்கள்
தொகுஇசுமிருதி இரானியின் முதல் நாவல் லால் சலாம், வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தால் 2021இல் வெளியிடப்பட்டது.[15][16] இது ஏப்ரல் 2010இல் தண்டேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் கிளர்ச்சிகளில் மத்திய காவல்துறையின் பங்கு குறித்து எழுதப்பட்டது.[17]
தேர்தல் வரலாறு
தொகு- 2004 – புது தில்லி சாந்தினி சௌக்கில் காங்கிரசு வேட்பாளர் கபில் சிபலுக்கு எதிராக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
- 2014 – அமேதி மக்களவைத் தொகுதியில் இராகுல் காந்தியிடம் தோல்வியடைந்தார்.
- 2019 – அமேதி மக்களவைத் தொகுதியில் இராகுல் காந்தியை வெற்றிகண்டார்.
- 2024 – அமேதி மக்களவைத் தொகுதியில் கிசோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Detailed Profile: Smt. Smriti tulsi Irani". India.gov.in. Archived from the original on 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
- ↑ "Detailed Profile: Smt. Smriti Zubin Irani". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-08-06.
- ↑ "Modi's complete cabinet: Jaitley gets Finance, Smriti Human Resources". Firstpost. 27 மே 2014. http://www.firstpost.com/india/modis-complete-cabinet-jaitley-gets-finance-smriti-human-resources-1544129.html.
- ↑ http://www.bhaskar.com/article/UT-DEL-NEW-smriti-irani-life-facts-hindi-news-4626269-PHO.html?seq=1
- ↑ 5.0 5.1 "Rise of Smriti Irani: Journey from bahu of TV to BJP's Vice President". The Economic Times. 1 November 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-11-01/news/43592820_1_smriti-irani-narendra-modi-modi-led-bjp. பார்த்த நாள்: 26 May 2014.
- ↑ 6.0 6.1 "Smriti Irani: From model to TV’s favourite bahu to Cabinet minister". Firstpost. 26 May 2014. http://www.firstpost.com/politics/smriti-irani-from-miss-india-finalist-to-tulsi-to-cabinet-minister-1542563.html.
- ↑ "'Class 12 pass’ and education minister?". First Post. http://www.firstpost.com/politics/class-12-pass-and-education-minister-no-madhu-kishwar-tells-smriti-irani-1545245.html. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ "Smriti goes back to school". TOI. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news-interviews/Smriti-goes-back-to-school/articleshow/7204688.cms.
- ↑ but she came out of this issue கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: கண்டறிந்து புகார் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
- ↑ "World Economic Forum names Smriti Irani as Young Global Leader from India". The Economic Times. 17 March 2015. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/world-economic-forum-names-smriti-irani-as-young-global-leader-from-india/articleshow/46596921.cms.
- ↑ "Meet the Cabinet Minister | Ministry of Women & Child Development | GoI". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ Irani, Smriti Zubin (27 January 2020). "Former Rajyasabha Member". rajyasabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ "MindMine Summit". mindminesummit.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ "Femina's Power List 2019: Women Who Changed The Game". femina.in. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ "Smriti Irani at launch of her novel: 'I stepped out to live my life and then history happened'". The Indian Express (in ஆங்கிலம்). 19 December 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ Irani, Smriti Zubin (29 November 2021). "'Lal Salaam': Smriti Irani's novel is based on the killing of 76 CRPF men by Maoists in Dantewada". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ "Smriti Irani turns author with 'Lal Salaam', novel pays tribute to 76 CRPF personnel martyred in 2010 Dantewada attack". The Economic Times. 29 November 2021. https://economictimes.indiatimes.com/magazines/panache/smriti-irani-makes-her-debut-as-an-author-with-novel-lal-salaam-a-tribute-to-76-crpf-personnel-martyred-in-2010-dantewada-attack/articleshow/87975165.cms.