சரோஜ் பாண்டே

சரோஜ் பாண்டே (Saroj Pandey-பிறப்பு சூன் 22,1968) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1] மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்கும் முன்னர் துர்க் மக்களவை உறுப்பினராக 15வது இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.

சரோஜ் பாண்டே
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
முன்னையவர்பூசன் இலால் சாங்டே
தொகுதிசத்தீசுகர்
பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
16 ஆகத்து 2014 – 26 செப்டம்பர் 2020
குடியரசுத் தலைவர்
பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா
பதவியில்
24 ஏப்ரல் 2013 – 21 ஆகத்து 2014
முன்னையவர்இசுமிருதி இரானி
பின்னவர்விஜயா ராகாத்கார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 இந்தியப் பொதுத் தேர்தல் – 2014 இந்தியப் பொதுத் தேர்தல்
முன்னையவர்தாராசந்த் சாகு
பின்னவர்தாம்ராத்வாஜ் சாகு
தொகுதிதுர்க்
சட்டப் பேரவை உறுப்பினர்-சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
8 திசம்பர் 2008 – 30 மே 2009
முன்னையவர்புதியது
பின்னவர்பஜன் சிங்
தொகுதிதுர்க்
நகரத்தந்தை - துர்க்
பதவியில்
2000–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூன் 1968 (1968-06-22) (அகவை 55)
பிலாய், சத்தீசுகர், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிபிலாய் மகளிர் கல்லூர், பண்டிட் இரவிசங்கர் பல்கலைக்கழகம்
முதுநிலை அறிவியல்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்Official Website

இளமை தொகு

சரோஜ் பாண்டே 22 சூன் 1968-இல் சியாம்ஜி பாண்டே மற்றும் குலாப் தேவி பாண்டே ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் முது அறிவியலில் (குழந்தைகள் மேம்பாடு) பட்டம் பிலாய் மகளிர் கல்லூரியில் (பண்டிட். இரவிசங்கர் பல்கலைக்கழகம், ராய்ப்பூர்) படித்துப் பெற்றார்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் பாண்டே துர்க் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் மீண்டும் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டில் வைசாலி நகரின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2009ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் துர்க் தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.[3][4] ஏப்ரல் 2013-இல், இவர் பாரதிய ஜனதாக மகிளா மோர்ச்சா (பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு) தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6] 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் தாம்ரத்வாஜ் சாகுவிடம் தோல்வியடைந்தார். ஆனால் தோல்வியடைந்த போதிலும் இவர் பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 2018-இல் மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளராகவும் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றிய பின்னர் இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பாஜகவின் தேசியச் செயலாளர் பதவியை வகித்தார்.[7]

விருதுகளும் அங்கீகாரமும் தொகு

ஒரே நேரத்தில் மாநகரத் தந்தை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக சரோஜ் பாண்டே உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திற்கும் லிம்கா சாதனை புத்தகத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2] நகர துர்க். நீண்ட காலம் தொடர்ந்து 10 ஆண்டுகள் இருந்த சாதனையையும் இவர் படைத்துள்ளார். மேலும் சிறந்த மாநகரத் தந்தை விருதையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Third assembly" (PDF). cgvidhansabha.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 August 2020.
  2. 2.0 2.1 "Detailed Profile: Km. Saroj Pandey". Government of India. Archived from the original on 24 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
  3. "Vijay Goel appointed BJP general secretary". தி இந்து. April 2008 இம் மூலத்தில் இருந்து 2008-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080423030401/http://www.hindu.com/2008/04/19/stories/2008041960220400.htm. 
  4. "Sushree Saroj Pandey speech while taking charge as Mahila Morcha President: 24.04.2013". YouTube. Bharatiya Janata Party. Archived from the original on 2021-12-21. பார்க்கப்பட்ட நாள் 24 August 2020.
  5. "Netapedia.in". www.netapedia.in. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  6. "A mayor versus a four-time winner". தி இந்து. 10 April 2009 இம் மூலத்தில் இருந்து 16 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090416005210/http://www.hindu.com/2009/04/10/stories/2009041056241300.htm. 
  7. "Saroj Pandey: BJP's Saroj Pandey wins Rajya Sabha poll from Chhattisgarh". https://timesofindia.indiatimes.com/india/bjps-saroj-pandey-wins-rajya-sabha-poll-from-chhattisgarh/articleshow/63432402.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜ்_பாண்டே&oldid=3920314" இலிருந்து மீள்விக்கப்பட்டது