ஜகதீப் தன்கர்

ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) (பிறப்பு 18 மே 1951) தற்போதைய இந்திய துணை சனாதிபதி ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமாவார். 2022 வரை, இவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றினார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். மேலும் 1989 முதல் 1991 வரை மக்களவை [4] உறுப்பினராகவும் இருந்தார். இவர் 11 ஆகஸ்டு 2022 அன்று 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார்.[5][6]

ஜகதீப் தன்கர்
அலுவல் படம், 2022
14வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 ஆகத்து 2022
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் வெங்கையா நாயுடு
21வது மேற்கு வங்காள ஆளுநர்
பதவியில்
30 சூலை 2019 – 18 சூலை 2022[1]
முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முன்னவர் கேசரிநாத் திரிபாதி
பின்வந்தவர் இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு)
தனி அமைச்சர், இந்திய அரசு
பதவியில்
21 நவம்பர் 1990 – 21 சூன் 1991
பிரதமர் சந்திரசேகர்
அமைச்சர் சத்ய பிரகாஷ் மாளவியா
அமைச்சரவை நாடாளுமன்ற விவகாரத்துறை
சட்டப் பேரவை உறுப்பினர், ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
4 திசம்பர் 1993 – 29 நவம்பர் 1998
முன்னவர் ஜக்ஜீத் சிங்
பின்வந்தவர் நாத்து ராம்
தொகுதி கிசான்கார் சட்டமன்றத் தொகுதி, ராஜஸ்தான்[2]
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை
பதவியில்
2 திசம்பர் 1989 – 21 சூன் 1991
முன்னவர் முகமது அயூப் கான்
பின்வந்தவர் முகமது அயூப் கான்
தொகுதி சுன்சுனூ
தனிநபர் தகவல்
பிறப்பு 18 மே 1951 (1951-05-18) (அகவை 72)[3]
கித்தனா, சுன்சுனூ மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஜனதா தளம் (1991 வரை)
இந்திய தேசிய காங்கிரசு (1991-2003)
இருப்பிடம் துணைக்குடியரசுத் தலைவர் இல்லம், 6 மவுலானா ஆசாத் சாலை, புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்)
பணி அரசியல்வாதி
தொழில்
  • வழக்கறிஞர்
இணையம் https://vicepresidentofindia.nic.in/

ஆரம்பகால வாழ்க்கை தொகு

தன்கர், 18 மே 1951 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கித்தானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[7]

அரசியல் தொகு

இவர். ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91இல் ஒன்பதாவது மக்களவையில், ஜனதா தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து 1993-98இல் ராஜஸ்தானின் 10வது சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவருமாவார்.[4]

ஆளுநராக தொகு

30 சூலை 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார்.[8]

2022 துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல் தொகு

சூலை 2022-ல், பாஜக தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக 2022ஆம் ஆண்டு 2022 தேர்தலுக்கான இந்தியத் துணைத் தலைவர் பதவிக்கு தன்கரை பரிந்துரைத்தது.[4]6 ஆகஸ்டு 2022 அன்று நடைபெற்ற 14வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் மார்கரட் அல்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.[9]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Dhankhar resigns as Bengal guv after VP nomination, Manipur's La Ganesan gets additional charge" (in en). Hindustan Times. 17 July 2022. https://www.hindustantimes.com/india-news/jagdeep-dhankhar-resigns-bengal-governor-vp-nomination-manipur-la-ganesan-charge-101658079989478.html. 
  2. "Kishangarh Assembly Election MLA Political Data". 6 October 2018. https://entranceindia.com/election-and-politics/kishangarh-assembly-constituency-rajasthan-mla-election-voters-political-leaders-parties-candidates-and-political-fact-sheet/. 
  3. "Jagdeep Dhankhar takes oath as West Bengal Governor". 30 July 2019 இம் மூலத்தில் இருந்து 13 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200113064710/https://www.outlookindia.com/newsscroll/jagdeep-dhankhar-takes-oath-as-west-bengal-governor/1586269. 
  4. 4.0 4.1 4.2 "Our Governor: Raj Bhavan, West Bengal, India". http://rajbhavankolkata.gov.in/html/ourgovernor.html. 
  5. Jagdeep Dhankhar sworn-in as 14th vice president
  6. Jagdeep Dhankhar takes oath as India's 14th Vice-President
  7. "Jagdeep Dhankhar". https://www.facebook.com/jagdeep.dhankhar.39. 
  8. "Centre appoints four new Governors, Jagdeep Dhankar now in-charge of West Bengal" (in en-IN). The Hindu. 20 July 2019. https://www.thehindu.com/news/national/centre-appoints-four-new-governors-jagdeep-dhankar-now-in-charge-of-west-bengal/article28620154.ece. 
  9. Jagdeep Dhankhar is 14th Vice-President of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதீப்_தன்கர்&oldid=3509113" இருந்து மீள்விக்கப்பட்டது