முகமது அயூப் கான்

இந்திய அரசியல்வாதி

கௌரவ கலபதி முகமது அயூப் கான் (Mohammed Ayub Khan) ( வீர சக்கரம்) (1932-15 செப்டம்பர் 2016) ஓர் இந்தியத் தரைப்படை வீரராவார், இவர் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்,


முகமது அயூப் கான்

பிறப்பு1932
நுவா கிராமம், கேத்ரி திக்கானா,
ஜெய்பூர் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்புநுவா, சுன்சுனூ மாவட்டம்,
ராஜஸ்தான், இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1950-1983
தரம்படைத்துறைத் தலைவர்
(கௌரவ கலபதி)
தொடரிலக்கம்ஜேசி-32607
படைப்பிரிவு18வது படைப்பிரிவு
போர்கள்/யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
  • பில்லோரா போர்
விருதுகள்வீர சக்கரம்
வேறு செயற்பாடுகள்நாடாளுமனற உறுப்பினர், மத்திய அமைச்சர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் 1932இல் ராஜஸ்தானின் சுன்சுனூ மாவட்டத்தின் நுவா என்ற கிராமத்தில் பிறந்தார்.[1]

இந்திய இராணுவத்தில் சேவை தொகு

இவரது தந்தை இமான் அலிகான் மற்றும் இவரது மாவட்டத்தைச் சேர்ந்த பலரைப் போலவே, இவரும் இந்தியத் தரைப்படையில் பணியாற்றினார். இவர் 1950இல் கவசப் படையின் 18வது குதிரைப் படைப்பிரிவில் சேர்ந்து பல பதவிகளை வகித்தார்.[2] 1965-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது சியால்கோட் பகுதியில் இவரது வீரத்திற்காக வீர சக்ரா விருது வழங்கப்பட்டது.[3] [4]

கான், 22 ஜூலை 1970 இல் ரிசல்டராகவும், 1 பிப்ரவரி 1978 இல் ரிசல்டார் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். [5] [6] அந்த நேரத்தில் அவர் புதிதாக உருவாக்கப்பட்ட 86 கவச படைப்பிரிவில் பணியாற்றினார்

அரசியல் தொகு

இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1984ஆம் ஆண்டு சுன்சுனூ தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எட்டாவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.[7] இவர் பொது கணக்குக் குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில், பிரதேச காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்தார்.[8]

1991ஆம் ஆண்டில் பத்தாவது மக்களவைக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் 15 செப்டம்பர் 1995 முதல் 16 மே 1996 வரை மத்திய விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[10] [11]

இறப்பு தொகு

15 செப்டம்பர் 2016இல் தனது 84 வயதில் தனது சொந்த கிராமமான நுவாவில் இறந்தார்.[12] [13] செப்டம்பர் 15, 2019 அன்று, இவரது கிராமத்தில் அயூப் கான் பெயரில் ஒரு வாயில் திறக்கப்பட்டது. 

மேற்கோள்கள் தொகு

  1. "Ayub Khan, the war hero who became an MP". 2015-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  2. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". 20 March 1965. 
  3. "VrC citation of Mohammed Ayyub Khan". Archived from the original on 2021-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  4. "Gazette of India No 1" (PDF). 1966-01-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  5. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 2 January 1971. p. 26. 
  6. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 3 June 1978. p. 546. 
  7. "8th Lok Sabha members list". பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  8. "Lok Sabha Members Profile - Mohd. Ayub Khan". பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  9. "10th Lok Sabha members list". பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  10. "Ayub Khan, the war hero who became an MP". 2015-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23.
  11. "Council of Ministers (1947-2015)" (PDF). 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  12. "1965 Indo-Pak war hero Capt Ayub Khan dies". 2016-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  13. "1965 Indo-Pak war hero Captain Ayub Khan dead". 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அயூப்_கான்&oldid=3567882" இலிருந்து மீள்விக்கப்பட்டது