வீர சக்கரம்

வீர சக்கரம் (Vir Chakra, Vr.C) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்[1].

இவ்விருது பெற்றோர் தங்களின் பெயரின் பின்னால் Vr.C என்று போட்டுக்கொள்ளலாம்.[2]

விருதின் தோற்றம்

தொகு

இந்த விருது 1-3/8 அங்குல வட்டவடிவ வெள்ளிப் பதக்கமாகும். நடுவில் சக்கரமும் தங்க முலாமில் இந்திய அரசு இலச்சினையும் புடைச்செதுக்கப்பட்ட ஐம்முனை நட்சத்திரம் முகப்பில் உள்ளது. ஓரங்களில் விருதின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஓர் சுழலும் பட்டையத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் விளிம்பில் நடுவில் இடைவெளி விடப்பட்டு தாமரை மலர்கள் இடையில் இருக்க இந்தியிலும் (தேவநாகரி) ஆங்கிலத்திலும் விருதின் பெயரும் ஆண்டும் குறிக்கப்படுகின்றன. 32 மி.மீ அகலமுள்ள அரை கரும்நீலம், அரை செம்மஞ்சள் நாடாவில் தொங்கவிடப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-30. பார்க்கப்பட்ட நாள் 2011-05-05.
  2. குறிப்பு: பிரித்தானிய இந்தியாவில் அரசி வழங்கிய விக்டோரியா கிராஸ் விருது பெற்றவர்கள் போட்டுக் கொள்ளும் V.C யிடமிருந்து வேறுபடுத்த இவ்வாறு விதிக்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-05.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சக்கரம்&oldid=3572082" இலிருந்து மீள்விக்கப்பட்டது