இந்தியச் சிறுமான்

பாலூட்டி இனம்
இந்தியச் சிறுமான்
குசராத்தின் கிர்க் காட்டில் ஓர் இந்தியச் சிறுமான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
போவிடே
துணைக்குடும்பம்:
ஆண்டிலோபின்னே
பேரினம்:
காசெல்லா
இனம்:
கா. பென்னெட்டீ
இருசொற் பெயரீடு
காசெல்லா பென்னெட்டீ
(சைக்கசு, 1831)

இந்தியச் சிறுமான் அல்லது சிங்காரா மான் (Chinkara) என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு சிறுமான் இன இரலை மான். இது இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் பாக்கித்தான்,[1] ஈரான் நாடுகளின் சில பகுதிகளிலும் உள்ள புல்வெளிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. இது இராசதாதனின் மாநில விலங்காகும்.

இம்மான் 65 செ. மீ. உயரமும் 23 கிலோ கிராம் எடையும் கொண்டிருக்கும். கோடையில் இதன் தோல் சிவந்த நிறத்திலும் மயிர் பளபளப்பாகவும் இருக்கும். வாடையில் வெள்ளையான வயிறும் கழுத்தில் உள்ள மயிரும் தனியாகத் தெரியும் வகையில் இருக்கும். இதன் கொம்புகள் 39 செ.மீ நீளம் வரை வளரும்.

கூச்ச குணமுடைய இவ்விலங்கு மனிதர்கள் வாழுமிடங்களைத் தவிர்க்கும். இந்தியச் சிறுமான் தனக்குத் தேவையான நீர்ச்சத்தைச் செடிகளில் இருந்தும் பனியில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் திறன் கொண்டுள்ளதால் இதனால் நீரில்லாமல் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும். பெரும்பாலும் இவை தனியாகவே காணப்பட்டாலும் சில சமயங்களில் நான்கு வரையிலான எண்ணிக்கையைக் கொண்ட குழுக்களாகவும் காணப்படும்.

சிறுத்தைகள், செந்நாய்கள் போன்றவை இவற்றை இரையாகக் கொள்கின்றன. ஆசியச் சிறுத்தையின் முதன்மை இரையாகவும் இந்தியச் சிறுமான் இருக்கிறது.

மேலும் இவ்விலங்கு மற்ற தாவர உண்ணிகளான நீலான், காட்டு ஆடு, காட்டுப் பன்றி போன்றவற்றுடன் தன் வாழிடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 IUCN SSC Antelope Specialist Group (2017). "Gazella bennettii". IUCN Red List of Threatened Species 2017: e.T8978A50187762. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T8978A50187762.en. https://www.iucnredlist.org/species/8978/50187762. பார்த்த நாள்: 19 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியச்_சிறுமான்&oldid=3921065" இலிருந்து மீள்விக்கப்பட்டது