ரண்தம்போர் தேசியப் பூங்கா
இந்தியாவில் அமைந்துள்ள பெரும் தேசியப் பூங்காக்களுள் ஒன்று
ரந்தம்பூர் தேசியப் பூங்கா (Ranthambore National Park, இந்தி: रणथंभौर राष्ट्रीय उद्यान) வட இந்தியாவில் அமைந்துள்ள பெரும் தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இது ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது. இப்பகுதியானது தேசியப்பூங்காவாக 1980 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (Project Tiger) கீழ் கொண்டுவரப்பட்டது. இது 392 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுபவற்றில் இப்பூங்காவும் முக்கியமான ஒன்று. இங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் மிகுதியாக வாழ்கின்றன. இப்பூங்காவின் அருகிலுள்ள கிராமங்களின் மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இங்கு 270க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன.[1]
ரண்தம்போர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
ரந்தம்பூர் தேசியப் பூங்கா | |
அருகாமை நகரம் | ஜெய்ப்பூர் |
ஆள்கூறுகள் | 26°01′02″N 76°30′09″E / 26.01733°N 76.50257°E |
பரப்பளவு | 392 சதுர கிலோமீட்டர்கள் |
நிறுவப்பட்டது | 1980 |
வலைத்தளம் | www.ranthamborenationalpark.com |