பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், போபால்
பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், போபால் (Regional Museum of Natural History, Bhopal) புது தில்லி தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு கிளையாகச் செயல்பட்டு வருகிறது. இது ஒரு முறைசாரா சுற்றுச்சூழல் கல்வியின் மையமாகும், இதன் முக்கிய நோக்கம் பல்வேறு உள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இது போபாலில் உள்ள சுற்றுச்சூழல் வளாகத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம் செப்டம்பர் 29, 1997 ஆம் நாளன்று [2] அப்போதைய இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய சிங் தலைமை தாங்கினார். இந்த அருங்காட்சியகம் மத்திய இந்தியாவின் பல்லுயிர் மற்றும் அதைச் சூழல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காட்சிக்கூடங்களில், டிரான்ஸ்கிரிப்டுகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஒலி ஒளிக்காட்சி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருண்மைகளின் வரிசையில் டியோராமாக்கள் மற்றும் நிகழ்வுகள் அவ்வப்போது வழடிங்கப்படுகின்றன. இது ஒரு உயிரியல், கணினி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு வேடிக்கையான வழியில் அறிவைப் பெறுவதற்கான ஒரு ஆராய்ச்சி அறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு தற்காலிக கண்காட்சி தளமும் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இது அவ்வப்போது பல்வேறு பொருண்மைகளில் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.[3] அருங்காட்சியகத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாள்கள் விடுமுறை நாள்கள் ஆகும். அருங்காட்சியகத்திற்குள் பார்வையாளர்கள் நுழையும்போது டைனோசர் குடும்பம் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிக்கலாம்.[4]
நிறுவப்பட்டது | 29 செப்டம்பர் 1997 |
---|---|
அமைவிடம் | பார்யாவரன் பரிசார் E-5, அரேரா காலனி, போபால், இந்தியா[1] |
ஆள்கூற்று | 23°12′49″N 77°25′34″E / 23.213743°N 77.426155°E |
வகை | இயற்கை வரலாறு |
வருனர்களின் எண்ணிக்கை | 7,000/மாதம் |
உரிமையாளர் | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) |
பொது போக்குவரத்து அணுகல் | SR8 (Bus) |
வலைத்தளம் | nmnh |
நோக்கங்கள்
தொகு- மத்திய இந்தியாவின் தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியியல் தகவல்களுடன் கண்காட்சிகளை உருவாக்குதல்.
- செயல்திறன் மற்றும் கல்வி நடவடிக்கைகள் மூலம் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் தொடர்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குதல்
- சுற்றுச்சூழல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக புவியியல் மற்றும் உயிரியலின் பள்ளி பாடத்திட்டத்தை வளப்படுத்தும் கண்காட்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தல்.
- குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் குடும்ப குழுக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கு பொருத்தமான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
- ஊனமுற்றோருக்கான சிறப்பு கல்வி நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்
- சுற்றுச்சூழல் கல்விக்கு பயனுள்ள பிரபலமான பருவ இதழ்கள் மற்றும் நூல்களை வெளியிடுதல்
- சுற்றுச்சூழல் கல்வியை மேம்படுத்துவதற்காக, மத்திய இந்தியாவில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து கற்பித்தல் திட்டங்களை ஒழுங்கமைத்தல்
- சுற்றுச்சூழல் கல்வியை விரிவுபடுத்துவதற்காக மாநிலம் தழுவிய அளவில் கல்வி நடவடிக்கைகளை நடத்துதல்
காட்சிக்கூடங்களில் உள்ள காட்சிப்பொருள்கள்
தொகுதற்போதைய காட்சிக்கூடத்தில் முதன்மையான பொருளாக அமைவது பல்லுயிர் ஆகும். இதில் இயற்கையின் பல்வேறு கூறுகளுக்கும் இடையேயான தொடர்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தாவரங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள நதிகள் மற்றும் மனித மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் உறவு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லுயிர்
தொகுபல்லுயிர் தொடர்பான காட்சிக்கூடம் காடுகள், தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் உயிரியல் பிரிவுகளைப் பற்றிய அடிப்படை கருத்தை புரிந்து கொள்ள வாய்ப்பை வழங்குகிறது. இங்கு, இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும், இயற்கை வளங்களின் முழு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் ஆன பொருள்கள் காட்சியில் உள்ளன.
பயோம்ஸ்
தொகுபயோம்ஸ் எனப்படுகின்ற பல்வேறு இயற்கை வாழ்விடங்களின் பல்லுயிர் தன்மையைக் காண்பிக்கும் ஏழு இயற்கை வாழ்விடங்கள் இந்த காட்சிக்கூடத்தில் உள்ளன. மத்திய இந்தியா பகுதியில் உள்ள பல்வேறு இயற்கை வாழ்விடங்களில் காணப்படுகின்ற பல்லுயிர் காட்சியில் உள்ளது. உலகின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளான பெருங்கடல், இலையுதிர் காடு, பாலைவனம், வெப்பமண்டல மழைக்காடு, ஊசியிலையுள்ள காடுகள் போன்றவற்றைப் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளன.
மத்திய இந்திய விலங்குகள் மற்றும் தாவரங்களின் புவியியல் தகவல்
தொகுஇந்தப் பகுதியில் மத்திய பிரதேசம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை மற்றும் காடுகள் துறையில் தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய புவியியல் தகவல்கள் காட்சியில் உள்ளன. இந்த பகுதியில் மத்தியப் பிரதேசத்தின் மூன்று பெரிய ஆறுகள் மற்றும் மாவட்டங்கள் தொடர்பான மத்தியப் பிரதேசத்தின் ஈரமான நிலத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
மனிதனும் இயற்கையும்
தொகுமனிதனுக்கான தேவைகள் அனைத்தும் உணவின் தன்மை மற்றும் உணவின் தேவை மற்றும் அதற்கான எரிபொருளின் தேவை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன என்ற உண்மையை மனித குலத்திற்குத் தெரிவித்தல் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பைகா பழங்குடியினரோடு உள்ள இணக்கம் தொடர்பாகவும் விளக்கப்பட்டுள்ளது. .
தேடல் மையம்
தொகுஇந்த மையத்தில், குழந்தைகள் தங்கள் வெவ்வேறு வண்ணங்களை மாற்றி, ஒரு ஊடகம் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஓவியத்தின் மாதிரிகள், விலங்கு முகமூடிகள் மற்றும் கால்தடங்களை உருவாக்குவது போன்ற பல வகையான வசதிகள் உள்ளன.
உயிரியல் கணினி அறை
தொகுஉயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக இங்கு ஒரு உயிரியல் கணினி அறை அமைக்கப்பட்டுள்ளது, அங்கு மல்டிமீடியா தொழில்நுட்பத்தை ஊடாடும் முறைகளைப் பயன்படுத்துவதை அறிந்துகொள்ளலாம்.
தற்காலிக கண்காட்சி
தொகுஅருங்காட்சியகத்தின் மையப் பகுதியில் ஒரு தற்காலிக கண்காட்சி மண்டபம் உள்ளது. அங்கு பல்வேறு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சிறப்பு தற்காலிக கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. அண்மையில் "மத்திய பிரதேச நதிகள்" குறித்த தற்காலிக கண்காட்சி 18 ஏப்ரல் 2017 ஆம் நாளன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக நடத்தப்பட்டது.
நூலகம்
தொகுஅருங்காட்சியகத்தில், குறிப்பு எடுக்க வசதியாக ஒரு நூலகம் இயங்கி வருகிறது. இதில் தாவரவியல் அறிவியல் புவியியல், விலங்கியல், அறிவியல், சுற்றுச்சூழல் வனவியல் வன மேலாண்மை, நுண்ணுயிரியல், ஆதித்யா போன்ற பல்வேறு பொருள்களுடன் தொடர்புடைய 5000 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
சுற்றுச்சூழல் தியேட்டர்
தொகுபார்வையாளர்களின் வசதிக்காக, வனவிலங்குகள் தொடர்பான திரைப்படங்கள் ஒவ்வொரு மாலையும் 3:00 முதல் 4:00 வரை திரையிடப்படுகிறது.
கல்விசார் நடவடிக்கைகள்
தொகுஇயற்கை அறிவியலில் ஆர்வத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக, அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக வருகின்ற பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு கல்வி நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் காண்க
தொகு- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்
- இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
- இயற்கை வரலாற்று பிராந்திய அருங்காட்சியகம், புவனேஸ்வர்
- பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், மைசூர்
- ராஜீவ் காந்தி இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சவாய் மாதோபூர்
குறிப்புகள்
தொகு- ↑ "India's Science popularization sites". Archived from the original on 2017-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
- ↑ "http://nmnh.nic.in/aboutus.htm". nmnh.nic.in/aboutus.htm. Archived from the original on 2015-05-10.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ Ganguly, Rageshri (22 April 2013). "Regional Museum of Natural History (RMNH) Bhopal organised a poster making competition on Monday on the occasion of Earth Day. The theme of the competition was 'the face of climate change.'". பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
- ↑ "http://sciencemuseums-ncstc.in/index.php?page=museum-detail&t=major&id=105". sciencemuseums-ncstc.in/index.php?page=museum-detail&t=major&id=105. Archived from the original on 2017-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
{{cite web}}
: External link in
(help)|title=
மேலும் காண்க
தொகு- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்
- இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
- இயற்கை வரலாற்று பிராந்திய அருங்காட்சியகம், புவனேஸ்வர்
- பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், மைசூர்
- ராஜீவ் காந்தி இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சவாய் மாதோபூர்
வெளி இணைப்புகள்
தொகு- http://nmnh.nic.in/bhopal.htm பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம்