மத்திய விலங்கு காட்சியக ஆணையம்

இந்தியாவில் மிருககாட்சிசாலைகளுக்கு, பார்க்க இந்தியாவில் மிருககாட்சிசாலைகளுக்கு பட்டியல் .

மத்திய விலங்கு காட்சியக ஆணையம் (Central Zoo Authority-CZA) என்ற அமைப்பு இந்திய அரசாங்கத்தின் விலங்குகாட்சி சாலைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு நிறுவனம்.[1] இது உலக விலங்கு காட்சி சாலை மற்றும் மீன்வள சங்கத்தின் (WAZA) துணை உறுப்பினராகும்.[2]

இந்திய விலங்கு காட்சிசாலைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர மவிஆ உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாவதற்கு முன்பு, பல மிருகக்காட்சிசாலைகள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. பொருத்தமற்ற விலங்குகளின் அடைப்புகள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம் தொடர்பான பதிவேடுகள் இல்லாமை, இதனால் அகக்கலப்பு, கலப்பினம் தோன்றுதல், மரபணு மாசுபாடு போன்ற குறைகளுக்குக் காரணமாயின. ஓர் சந்தர்ப்பத்தில் ஒரு ஆசியச் சிங்கம் ஆப்பிரிக்கச் சிங்கத்துடன் இனக்கலப்புச் செய்யப்பட்டது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972இன் 38 ஏ பிரிவின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகக் குழுவில் தலைவர் ஒருவரின் கீழ், பத்து உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலாளர் ஒருவரைக் கொண்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் தேசிய முயற்சியை நிறைவு செய்வதே இந்த ஆணையத்தின் முக்கிய அதிகாரமாகும். மிருகக்காட்சிசாலையில் விலங்குகளின் வசதி, பராமரிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் முதலானவை உயிரியல் பூங்கா விதி1992களின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு மிருகக் காட்சிசாலையும் அதன் செயல்பாட்டிற்கு இந்த ஆணையத்திடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்த ஆணையம் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் மிருககாட்சி சாலைகள் செயல்படுவதை மதிப்பீடு செய்து அதற்கேற்ப அங்கீகாரத்தை வழங்குகிறது. பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் செயல்படாத விலங்கியல் பூங்காக்களின் அங்கீகாரம் மறுக்கப்படுவதால் மூடப்பட வேண்டும்.

1992இல் இந்த ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து, 347 விலங்கியல் காட்சி சாலைகள்/உயிரியல் பூங்காக்களை மதிப்பீடு செய்துள்ளது, இவற்றில் 164 அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 183 அங்கீகாரம் மறுக்கப்பட்டன. அங்கீகாரம் மறுக்கப்பட்ட 183 மிருகக்காட்சிசாலைகளில் 92 மூடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்த விலங்குகள் பொருத்தமான வேறு காட்சி சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள 91 அடையாளம் காணப்படாத விலங்கியல் காட்சி சாலைகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆணையத்தின் பங்கு நிர்வகிப்பவரை விட மேலானது. எனவே, விலங்கு நிர்வாகத்தில் விரும்பிய தரத்தை அடைவதற்கான ஆற்றலைக் கொண்ட இந்தமைப்பு, உயிரியல் பூங்காக்களுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. நிர்வாகத் திறன்களோ அல்லது தேவையான வளங்களோ இல்லாத மிருக காட்சி சாலைகள் மட்டுமே மூடப்படுமாறு கேட்கப்படுகின்றன.

அங்கீகாரம் வழங்குதல் மற்றும் நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட முதன்மை செயல்பாட்டைத் தவிர, உயிரியல் பூங்காக்களிடையே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I மற்றும் IIஇன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஆபத்தான வகையிலான விலங்குகளின் பரிமாற்றத்தையும் மத்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் கட்டுப்படுத்துகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு உயிரியல் பூங்காக்களுக்கு இடையில் விலங்குகளைப் பரிமாறிக்கொள்வது எக்சிம் கொள்கையின் கீழ் தேவையான அனுமதிகளுக்கு இந்த ஆணையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரத்தால் CITES அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆணையத்தினர் மிருகக்காட்சிசாலையின் பணியாளர்களின் திறன் மேம்பாடு, திட்டமிடப்பட்ட இனப்பெருக்கம் திட்டங்கள், விலங்குகள் வாழிடத்தில் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சியினை (உயிரி தொழில்நுட்ப தலையீடு உள்ளிட்ட) ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றனர். ஆரம்பத்திலிருந்தே இந்த ஆணையம் ஐதராபாத்தில் ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு ஆய்வகத்தை நிறுவுதல், உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வது, திட்டமிடப்பட்ட சிவப்பு பாண்டாவை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் அதை மீண்டும் காட்டுக்குள் விடுதல், தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை நிறுவனங்கள் மற்றும் விலங்குகளின் சிறந்த சுகாதார பராமரிப்புக்காக நோய் கண்டறியும் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளைப் பிராந்திய உயிரியல் பூங்காக்களுடன் தொடர்பினை ஏற்படுத்திச் செயல்படுத்தி வருகின்றது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Walker, Sally (August 2004). "Central Zoo Authority and Indian Zoos: A Current Overview" (PDF). zoosprint.org. ZoosPrint. Archived from the original (PDF) on 21 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Members". waza.org. WAZA. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011.

வெளி இணைப்புகள்

தொகு