மகேந்திரநாத் பாண்டே
இந்திய அரசியல்வாதி
மகேந்திரநாத் பாண்டே (Mahendra Nath Pandey) (பிறப்பு: 15 அக்டோபர் 1957), பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] இவர் சூலை 2021 முதல் கனரகத் தொழில்கள் அமைச்சராக உள்ளார்.
மகேந்திரநாத் பாண்டே | |
---|---|
महेन्द्रनाथ पाण्डेय | |
மகேந்திரநாத் பாண்டே, 2017 | |
கனரகத் தொழில்கள் அமைச்சர் | |
பதவியில் சூலை 2021 – 7 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | தர்மேந்திர பிரதான் |
தொகுதி | சந்தௌலி மக்களவைத் தொகுதி |
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பெரும்பான்மை | 156,756 வாக்குகள் |
உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 ஆகஸ்டு 2017 | |
முன்னையவர் | கேசவ பிரசாத் மௌரியா |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | ராம்கிஷன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1957 பக்கப்பூர், உத்தரப் பிரதேசம் , இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரதிமா பாண்டே |
வாழிடம் | வாரணாசி |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
மந்திரி சபை | நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை |
உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றியவர்.[3]
இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், 2016 - 2017 காலத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில், இராஜங்க அமைச்சரவாக இருந்தவர்.[4][5]
பின்னர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று நியமிக்கப்பட்டார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Mahendra Nath Pandey". My Neta. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
- ↑ "BJP directs Modi wave at eastern UP". The Hindu Business Line. 24 April 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
- ↑ "Mahendra Nath Pandey Appointed Uttar Pradesh BJP Chief". என்டிடிவி. 31 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
- ↑ Katiyar, Prema (10 July 2016). "Meet these three new ministers who have found berths in various ministries". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
- ↑ "Modi Cabinet reshuffle 2016: Modi surprises – Smriti Irani loses HRD, VK Singh deprived of MoS N-E charge". The Financial Express. 5 July 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2019.
- ↑ "Mahendra Nath Pandey gets Skill Development". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.