ராம்தாஸ் அதவாலே
இராம்தாஸ் பாண்டு அதவாலே (Ramdas Bandu Athawale) (பிறப்புப்:25 திசம்பர் 1959), இந்தியச் அரசியல்வாதியும், இந்தியக் குடியரசுக் கட்சியின் (அ) தலைவரும் ஆவார். இவர் 3 ஏப்ரல் 2014 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
ராம்தாஸ் அதவாலே | |
---|---|
![]() | |
அதவாலே பத்திரிகையாளர் சந்திப்பின் போது புது தில்லி 24 நவம்பர் 2017. | |
இணை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 5 சூலை 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 3 ஏப்ரல் 2014 | |
முன்னவர் | பிரகாஷ் ஜவடேகர் |
தொகுதி | மகாராட்டிரம் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 அக்டோபர் 1999 – 16 மே 2009 | |
முன்னவர் | சந்தீபன் தோரத் |
பின்வந்தவர் | தொகுதி ஒழிக்கப்பட்டது |
தொகுதி | பந்தர்பூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 1998–1999 | |
முன்னவர் | நாராயண் அதவாலே |
பின்வந்தவர் | மனோகர் ஜோஷி |
தொகுதி | மும்பை வடமத்தியத் தொகுதி |
சமூக நலம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 1990–1995 | |
மேலவை உறுப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றம் | |
பதவியில் 1990–1996 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இராம்தாஸ் பாண்டு அதவாலே 25 திசம்பர் 1959 சாங்குலி மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியக் குடியரசுக் கட்சி (அ) (1990 - தற்போதுவரை) |
பிற அரசியல் சார்புகள் |
இந்தியக் குடியரசுக் கட்சி (முன்பு 1990) |
பணி | தொழிற்சங்கத் தலைவர், சமூக ஆர்வலர் |
இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்த போது, 12, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து இந்தியக் குடியரசுக் கட்சி (அ) எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆனார்.
இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை மற்றும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார். [1][2]