அஸ்வினி குமார் சௌபே
அஸ்வினி குமார் சௌபே (Ashwini Kumar Choubey, பிறப்பு: 02 சனவரி, 1953)[2] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.
அஸ்வினி குமார் சௌபே | |
---|---|
இணை அமைசர் & நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | ஜகதா நந்த் சிங் |
தொகுதி | புக்சர் |
இணை அமைச்சர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1953 பாகல்பூர், பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | அர்ஜித் சஷ்வத் சௌபே & அவிரல் சஷ்வத் சௌபே |
வாழிடம்(s) | பாகல்பூர், பீகார், இந்தியா |
முன்னாள் கல்லூரி | பாட்னா பல்கலைக்கழகம் |
தொழில் | சமூக சேவகர் & அரசியல்வாதி |
7 சூலை 2021 | |
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், புக்சர் தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் தொகுதியில் போட்டியிட்டு, பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 03 செப்டம்பர் 2017 அன்று, நரேந்திர மோடியின் முதலாவது அமைச்சரவையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3][4][5]
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்பு நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில், மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]
இவர் தற்போது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ministers and therir Mistries of India
- ↑ "அஸ்வினி குமார் சௌபே". Archived from the original on 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-06-16.
- ↑ "MoS for Health Ashwini Kumar Choubey flags off Organothon to support & pledge for organ donation". newsonair.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Union minister Ashwini Kumar Choubey seeks involvement of state health ministers in National Health Mission". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
- ↑ "Union minister Ashwini Choubey cautions judiciary to avoid conflict with legislature". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
- ↑ "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019