சுப்பிரமணியம் செய்சங்கர்

(சுப்பிரமணியம் செயசங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (Subrahmanyam Jaishankar, 9 சனவரி 1955) இவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இறுதியாக இந்தியாவின் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர்.[1][2] இந்திய வெளியுறவுப் பணிச்சேவை பேராளரான செயசங்கர் முன்னதாக செக் குடியரசிலும் (2001–04) சீனாவிலும் (2009–13) ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை பேரம் பேசுவதில் முக்கியப் பங்காற்றி உள்ளார்.

சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை (ஓய்வு)
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
In office
30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சுஷ்மா சுவராஜ்
31வது வெளியுறவுச் செயலர்
In office
28 ஜனவரி 2015 – 28 சனவரி 2018
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சுஜாதா சிங்
பின்னவர்விஜய் கேசவ் கோகலே
ஐக்கிய அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர்
In office
1 டிசம்பர் 2013 – 28 சனவரி 2015
முன்னையவர்நிருபமா ராவ்
பின்னவர்அர்ஜுன் குமார் சிங்
சீனாவிற்கான இந்தியத் தூதுவர்
In office
1 சூன் 2009 – 1 டிசம்பர் 2013
முன்னையவர்நிருபமா ராவ்
பின்னவர்அசோக் காந்தா
சிங்கப்பூருக்கான இந்திய தூதுவர்
In office
1 சனவரி 2007 – 1 சூன் 2009
பின்னவர்டி. சி. ஏ. இராகவன்
செக் குடியரசிற்கான இந்தியத் தூதுவர்
In office
1 சனவரி 2001 – 1 சனவரி 2004
பின்னவர்பி. எஸ். இராகவன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1955 (1955-01-15) (அகவை 69)
புதுதில்லி, இந்தியா இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கியோக்கோ ஜெய்சங்கர்
பிள்ளைகள்3 (துருவன், அர்ஜுன் & மேத்தா)
முன்னாள் கல்லூரிஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
வேலைஇராஜதந்திரி
அரசியல்வாதி
விருதுகள்பத்மஸ்ரீ (2019)

நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் தொகு

30 மே 2019 அன்று இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமரான பதவியேற்ற நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவர் கேபினெட்[தெளிவுபடுத்துக]அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4] 31 மே 2019 அன்று இவருக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5][6]

குடும்பம் தொகு

இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றிவர். இந்தியவியல் அறிஞரான இவரது தம்பி சஞ்சய் சுப்ரமணியம், ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக உள்ளார்.

வகித்த பதவிகள் தொகு

 • 1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
 • 1985-1988க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
 • 1990-1993க்கு இடையில் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார்.
 • 1993-1995இல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) பதவியேற்றார்.
 • 1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா) பொறுப்பு வகித்தார்.
 • 2000-2004இல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர் பதவி வகித்தார்.
 • 2007-2009இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார்.
 • 2009-2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
 • 2013-2015க்கு இடையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். மோதியின் நியூயார்க் பேரணியின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
 • 2015-2018க்கு இடையில் இந்தியாவின் வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கர், பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
 • 2019ஆம் ஆண்டு முதல் [[வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)|இந்திய வெளியுறவு அமைச்சர் ஆனார். இந்திய தூதாண்மையை பரப்புவதில் அதிக கவனம் செலுத்தினார்.

மேற்கோள்கள் தொகு

 1. ACC Appointment , Press Information Bureau, 29 January 2015
 2. S Jaishankar, is the new foreign secretary பரணிடப்பட்டது 2015-01-30 at the வந்தவழி இயந்திரம் , Hindustan Times, 29 January 2015
 3. நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் பதவியேற்ற அமைச்சர்கள்
 4. ஜெய்சங்கர்: மோதி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த புதுமுகம் யார்?
 5. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
 6. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019