நிருபமா ராவ்

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி

நிருபமா ராவ் எனப் பரவலாக அறியப்படும் நிருபமா மேனன் ராவ், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். இவர் பெரு, சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராகவும், இலங்கைக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர்.[1] 2009 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராகப் பணியாற்றிய இவருக்கு, இந்தியாவில் இப்பதவியை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் உண்டு.

நிருபமா ராவ்
ஐக்கிய அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்
பதவியில்
1 ஆகத்து 2011 – 5 நவம்பர் 2013
முன்னவர் மீரா சங்கர்
பின்வந்தவர் எஸ். ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத்துறைச் செயலர்
பதவியில்
31 யூலை 2009 – 31 யூலை 2011
முன்னவர் சிவ்சங்கர் மேனன்
பின்வந்தவர் ரஞ்சன் மத்தாய்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 திசம்பர் 1950 (1950-12-06) (அகவை 72)
மலப்புறம், கேரளா, இந்தியா
தேசியம் இந்தியர்
பணி இராஜதந்திரி

இளம்பருவம் தொகு

இவர் கேரளாவின் மலப்புறத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையார் இராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால், பெங்களூர், புனே, லக்னோ, குன்னூர் போன்ற பல்வேறு இடங்களில் கல்வி பயின்றார். 1970ல், பெங்களூருவில் இருந்த மவுன்ட் கார்மல் கல்லூரியில், ஆங்கிலத்தில் இளங்கலைச் சிறப்புப் பட்டம் பெற்றார்.[2] பின்னர், அக்காலத்தில் மரத்வாடா பல்கலைக்கழகம் என அறியப்பட்ட மகாராட்டிரத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். 1973ல் அனைத்திந்தியக் குடிசார் சேவைகள் தேர்வில் முதல் இடம் பெற்றுச் சித்தியடைந்த இவர் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.[1]

குறிப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_ராவ்&oldid=3747527" இருந்து மீள்விக்கப்பட்டது