கிருஷ்ணசாமி சுப்பிரமணியன்

கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் (Krishnaswamy Subrahmanyam) (19 சனவரி 1929 – 2 பிப்ரவரி 2011), முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், பன்னாட்டு போர்த்திறன் நடவடிக்கைகள் தொடர்பான வல்லுநரும், இதழியலாளரும் ஆவார். [1] [2][3]

கிருஷ்ணசாமி சுப்ரமணியன்
K. Subrahmanyam.jpg
கே. சுப்பிரமணியன்
பிறப்பு19 சனவரி 1929
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இறப்பு2 பிப்ரவரி 2011
இருப்பிடம்புதுதில்லி
தேசியம்இந்தியர்
கல்விமாநிலக் கல்லூரி, சென்னை
இலண்டன் பொருளியல் பள்ளி
பணிபோர்த்திறன் சார்ந்த பகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா
பிள்ளைகள்விஜய், சுப்பிரமணியம் செயசங்கர், சஞ்சய் சுப்ரமணியம்

இந்தியப் பாதுகாப்புத் துறை நடவடிக்கைளில் இவரது நீண்டகால பங்களிப்பு அளப்பரியது. மேலும் இவர் பன்னாட்டு போர்த்திறன் பகுப்பாய்வு திறன் மிக்கவராகவும், இந்தியாவின் அணுசக்தித் துறையின் கொள்கைகளில் சிறப்பான முடிவு எடுப்பவராகவும் அறியப்படுகிறார்.[4][5][6] இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் [7]இரண்டாவது இயக்குநராக பணியாற்றியவர்.

இவர் 2007-இல் இந்திய - அமெரிக்க குடிமை அணுசக்தி ஒப்பந்ததம் ஏற்பட முக்கிய பங்காற்றியவர். [8][9]

குடும்பம்தொகு

இவரது மகன்களில் இரண்டாமவரான சுப்பிரமணியம் செயசங்கர், இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகவும், இறுதியில் அமெரிக்கா தூதராகவும் பின்னர் சனவரி 2015-இல் இந்திய வெளியுறவுத் துறை செயலாளாராகவும் பணியாற்றியவர். [10] 30 மே 2019 அன்று இரண்டாம் முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். [11]

இவரது மூன்றாம் மகனான சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியல் அறிஞர். இவர் தற்போது அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்தொகு

 1. "India and Pakistan: A Post-Election Status Report". Boston University (10 May 1996). மூல முகவரியிலிருந்து 18 அக்டோபர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 May 2009.
 2. Page xxiv, Chellaney, Brahma, "Securing India's future in the new millennium", Orient Blackswan, 1999
 3. K Subrahmanyam (28 November 2008). "COLUMN – Attack on Mumbai". Reuters. http://in.reuters.com/article/specialEvents2/idINIndia-36769020081128. பார்த்த நாள்: 25 May 2008. 
 4. C. Uday Bhaskar (19 July 2008). "A legend in uniform". Frontline. https://frontline.thehindu.com/static/html/fl2515/stories/20080801251503300.htm. 
 5. Bharat Karnad (6 May 2007). "Minimum deterrence and the India-US nuclear deal". Seminar India.
 6. N Ram (10 September 1999). "Dreaming India's nuclear future". Frontline. மூல முகவரியிலிருந்து 24 November 2002 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 May 2009.
 7. Institute for Defence Studies and Analyses
 8. Somini Sengupta (10 December 2006). "Interests Drive U.S. to Back a Nuclear India". The New York Times. https://www.nytimes.com/2006/12/10/world/asia/10india.html. பார்த்த நாள்: 25 May 2009. 
 9. "India in Overdrive to Conclude Nuclear Deal". The Seoul Times (10 January 2007). பார்த்த நாள் 25 May 2009.
 10. வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்பு
 11. நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் பதவியேற்ற அமைச்சர்கள்

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு