பக்கன் சிங் குலாஸ்தே
பக்கன் சிங் குலாஸ்தே (Faggan Singh Kulaste, பிறப்பு: 18 மே 1959) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது உருக்கு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
பக்கன் சிங் குலாஸ்தே | |
---|---|
இணை அமைச்சர், உருக்கு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சகம் | |
பிரதமர் | நரேந்திர மோடி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மாண்ட்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 மே 1959 மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சாவித்ரி குலாஸ்தே |
பிள்ளைகள் | மகள்கள் - வந்தனா குலாஸ்தே, ஜோதி குலாஸ்தே, கிரண் குலாஸ்தே மகன் - வேட்பிரகாஷ் குலாஸ்தே |
வாழிடம்(s) | மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
இணையத்தளம் | www.fskulaste.in |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மாண்ட்லா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு உருக்குத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
இவர் இதற்கு முன்பு 1996, 1998, 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான, பசோரி சிங் மஸ்ராம் என்பவரிடம் தோல்வியடைந்தார்.
இவர் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றினார்.