ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஊரக மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது இந்திய கிராமப்புற சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் பணியை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்த அமைச்சகம் கிராமப்புற சுகாதாரம் மற்றும் கல்வி, குழாய் மூலம் வடிகட்டிய குடிநீர் திட்டங்கள், மலிவு வீட்டு வசதித் திட்டங்கள், பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் கிராமப்புற சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்தகிறது. இது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு மானியங்களையும் வழங்குகிறது.[3]சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற வளர்ச்சி இயக்கத்தை இந்த அமைச்சகம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக 7 சூலை 2021 முதல் கிரிராஜ் சிங் உள்ளார்.

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)
அமைச்சகம் மேலோட்டம்
அமைப்பு20 சனவரி 1980; 44 ஆண்டுகள் முன்னர் (1980-01-20)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்கிருஷி பவன், புது தில்லி
ஆண்டு நிதி1,22,398 (US$1,500) (2020–21 est.)[1]
அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
  • சாத்வி நிரஞ்சன் ஜோதி[2], இராஜங்க அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை
  • பக்கான் சிங் குலஸ்தே[2], இராஜாங்க அமைச்சர், ஊரக மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் தலைமை
  • நாகேந்திர நாத் சிங்[2], செயலாளர், ஊரக மேம்பாட்டுத் துறை
வலைத்தளம்rural.nic.in

ஊராக மேம்பாட்டு அமைச்சகத்தின் துறைகள்

தொகு

அமைச்சகம் இரண்டு துறைகளைக் கொண்டுள்ளது: ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நில வளத் துறை. இத்துறைகள் இஆப மூத்த செயலாளர் தலைமையில் செயல்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறை

தொகு

ஊரக வளர்ச்சித் துறை மூன்று தேசிய அளவிலான திட்டங்களை வழிநடத்துகிறது: 1. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (கிராம் சதக் யோஜனா) (PMGSY), 2. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் (சுவர்ணஜெயந்தி கிராம் சுவரோஸ்கர் யோஜனா (SGSY) கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) இது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுகிறது. இத்துறையின் கீழ் மூன்று தன்னாட்சி அமைப்புகள் செயல்படுகிறது.[4] அவைகள்:

  1. மக்கள் நடவடிக்கை மற்றும் கிராமப்புற தொழில்நுட்ப முன்னேற்ற கவுன்சில் (CAPART)
  2. தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் (NIRD)
  3. தேசிய ஊரக சாலை மேம்பாட்டு நிறுவனம் (NRRDA)

இந்த மூன்று அமைப்புகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைவராகவும், அமைச்சகத்தின் செயலர் துணைத் தலைவராகவும் உள்ளனர்.[5]

நில வளத் துறை

தொகு

நில வளங்கள் திணைக்களம் மூன்று தேசிய அளவிலான திட்டங்களைக் கையாள்கிறது:[6]

  1. நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா)
  2. நில பதிவுகளை நவீனமயமாக்கல் திட்டம்
  3. நீரஞ்சல் தேசிய நீர்நிலை திட்டம் (Neeranchal National Watershed Project)

இதர திட்டங்கள்

தொகு
  • ஊரக முன்னோடி நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை திட்டம்
  • ஊரகப் பகுதிகளில் எளிதாக தொழில் செய்ய - முன்முயற்சிகள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Union Budget 2020-21 Analysis" (PDF). prsindia.org. 2020. Archived from the original (PDF) on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  2. 2.0 2.1 2.2 2.3 "Who's who". Ministry of Rural Development, இந்திய அரசு.
  3. "About the Ministry :: Ministry of Rural Development (Govt. Of India)". Archived from the original on 18 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2015.
  4. "Overview". Department of Rural Development. Archived from the original on 8 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2014.
  5. "TERI: Innovative Solutions for Sustainable Development - India". www.teriin.org.
  6. "Schemes". Department of Land Resources. 5 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2014-01-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரக_வளர்ச்சி_அமைச்சகம்&oldid=3747589" இலிருந்து மீள்விக்கப்பட்டது