மாண்ட்லா (Mandla, இந்தி: मंडला) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் மாண்ட்லா மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது ஒரு நகராட்சி ஆகும். இந்நகரானது நர்மதை ஆற்றின் கிளையின் அருகே அமைந்துள்ளது. மூன்று மக்கமும் ஆறால் சூழப்பட்ட நகராகும். மாண்ட்லாவிலிருந்து ராம்நகர் வரையான 15 மைல்கள் பாறைகளினூடே நர்மதை நதி செல்கிறது. இவ்விடத்தில் நர்மதைநதி வணங்கப்படுகிறது. இங்கு அழகிய படித்துறைகள் அமைந்துள்ன. இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 445 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை தொகு

2001 ஆம் ஆண்டின் மக்க்ட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 45,907[1] ஆகும். இதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். மொத்த மக்கட்தொகையில் 12% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 72% ஆகும். மக்கட்தொகையில் 90% இந்துகளும், 4% கிறிஸ்தவர்களும், 5% முஸ்லீம்களும் மற்றும் 1% சமணம் மற்றும் பெளவுத்த மதத்தைச் சார்தவர்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ட்லா&oldid=1880279" இருந்து மீள்விக்கப்பட்டது