சத்யபால் சிங்
- சத்யபால் சிங் சைனி என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.
சத்யபால் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாகுபத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1955 ஜூன் 23-ஆம் நாளில் பிறந்தார்.[1] இவர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் இராஜங்க அமைச்சராக இருந்தவர்.
இவர் மீண்டும் 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.