அன்னபூர்ணா தேவி யாதவ்
இந்திய அரசியல்வாதி
அன்னபூர்ணா தேவி யாதவ் (Annapurna Devi Yadav) (பிறப்பு - 2 பிப்ரவரி 1970) ஒரு இந்திய அரசியல்வாதி. கோடர்மா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஜார்க்கண்டின் கோடர்மா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]இவர் தற்போது இந்தியக் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[5]
Annpurna Devi | |
---|---|
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 சூன் 2024 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | இசுமிருதி இரானி |
கல்வித் துறை அமைச்சர் (இந்தியா) இந்திய அரசு | |
பதவியில் 7 சூலை 2021 – 9 சூன் 2024 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சஞ்சய் ஷாம்ராவ் |
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | ரவீந்திர குமார் ராய் |
தொகுதி | கோடர்மா மக்களவைத் தொகுதி |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1998–2014 | |
முன்னையவர் | இரமேஷ் பிரசாத் யாதவ் |
பின்னவர் | நீரா யாதவ் |
தொகுதி | கோடர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 பெப்ரவரி 1970 அஜ்மேரி, பீகார், இந்தியா (தற்பொழுது சார்க்கண்டு) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | இரமேஷ் பிரசாத் யாதவ்[1] |
வாழிடம்(s) | கோடர்மா, சார்க்கண்டு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | முதுநிலை ராஞ்சி பல்கலைக்கழகம் |
மூலம்: [1] |
மத்திய அமைச்சராக
தொகுஜூலை 7 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அரசின் அமைச்சரவையில், அன்னபூர்ணா தேவி கல்வித் துறையின் இணை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "पति की मृत्यु के बाद 1998 में विरासत में मिली थी राजनीति". www.bhaskar.com (in இந்தி).
- ↑ "Sanjay Seth is BJP candidate from Ranchi, Annapurna from Koderma". 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
- ↑ Saran, Bedanti (26 March 2019). "Lok Sabha Elections 2019:Jharkhand RJD chief Annapurna Devi joins BJP". பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ "BJP-AJSU Party alliance wins 12 of 14 seats in Jharkhand". தி எகனாமிக் டைம்ஸ். 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
- ↑ Ministers and their Ministries of India