நீரா யாதவ்

இந்திய அரசியல்வாதி

முனைவர் நீரா யாதவ் (Neera Yadav) என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்க்கண்ட் மாநிலத் தலைவர் ஆவார். இவர் செப்டம்பர் 18, 1971இல் பிறந்தார். விஜய் யாதவ் என்பவரை நீரா யாதவ் திருமணம் செய்துகொண்டார்.[1] நீரா யாதவ் சார்க்கண்டு மாநிலம் கோடர்மா (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வினோபா பாவ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் 1996இல் முதுநிலை பொருளாதாரம் மற்றும் 2009இல் ஆசிரியர் பயிற்சி பட்டத்தினை ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பெற்றார். கோடர்மாவிலுள்ள உள்ள ஓர் இடைநிலைக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

நீரா யாதவ்
Neera Yadav
ड़ नीरा यादव
மனிதவள மேம்பாட்டுத் துறை, சார்க்கண்டு அரசு
பதவியில்
2014-2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நீரா யாதவ்

18 செப்டம்பர் 1971 (1971-09-18) (அகவை 53)
சார்க்கண்டு
தேசியம்இந்தியா
வேலைஅரசியல்வாதி

யாதவ் ஜார்கண்ட் அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சராக (2014-2019) பணியாற்றியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Smt. Neera Yadav". India: Chief Minister's Office, Government of Jharkhand. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "One woman, two defectors, one vacancy". https://www.telegraphindia.com/states/jharkhand/one-woman-two-defectors-one-vacancy/cid/1382783#.VOhp2Hn9ljo. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரா_யாதவ்&oldid=3218683" இலிருந்து மீள்விக்கப்பட்டது