ராஞ்சி பல்கலைக்கழகம்

ராஞ்சி பல்கலைக்கழகம் இந்திய மாநிலமான சார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் 90,000 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு உள்ள மைய நூல்கத்தில் 150,000 நூல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி விடுதிகள் உள்ளன. இந்த பல்கலைக்கு பல்கலைக்கழக மானியக் குழு 38 கோடி ரூபாயை ஆண்டுதோறும் வழங்குகிறது. [1]

ராஞ்சி பல்கலைக்கழகம்
Ranchi University
குறிக்கோளுரைநமது எதிர்காலம் நமது எண்ணப்படியே அமையும்
வகைபொது
உருவாக்கம்ஜூலை 12, 1960
வேந்தர்சையது அகமது
துணை வேந்தர்எல். என். பகத்
அமைவிடம்ராஞ்சி, சார்க்கண்ட், இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்ranchiuniversity.org.in

இது ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, கும்லா, குந்தி, சிம்தேகா, லோஹார்தாகா ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. இங்கு அறிவியல், மாந்தவியல், பொருளியல் உள்ளிட்ட துறைகளில் பாடம் நடத்துகின்றனர்.

சான்றுகள்தொகு

  1. Students India:Course

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஞ்சி_பல்கலைக்கழகம்&oldid=2384788" இருந்து மீள்விக்கப்பட்டது