இந்திய உயர்கல்வி நிறுவனம்

இந்திய உயர்கல்வி நிறுவனம் (Indian Institute of Advanced Study (சுருக்கமாக:IIAS), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத் தலைநகரான சிம்லா நகரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது[1] ஆய்வுப் படிப்புகளுக்கான இந்நிறுவனம் 20 அக்டோபர் 1965 முதல் செயல்படுகிறது.[2] இது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் கட்டிடம்

வரலாறு மற்றும் நிறுவுதல்

தொகு

இந்நிறுவனம் 6 அக்டோபர் 1964 அன்று பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இந்நிறுவனத்தை முறைப்படி 20 அக்டோபர் 1965 அன்று திறந்து வைத்தார். இதன் முதல் இயக்குநர் நிகரஞ்சன் ராய் ஆவார்.

ஆய்வுப் பிரிவுகள்

தொகு
  • மனிதநேயப் படிப்புகள்
    • கலைகள் மற்றும் அழகியல்
    • இலக்கியங்களின் ஒப்பீட்டு ஆய்வு
    • சமயம் மற்றும் தத்துவம்
  • சமூக அறிவியல்கள்
    • மேம்பாட்டு ஆய்வு
    • அரசியல் நிறுவனங்களின் ஒப்பீட்டு ஆய்வு
    • வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சமூக-பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார உருவாக்கம் .
  • இயற்கை மற்றும் வாழ்க்கை அறிவியல்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அரசு கொள்கைகள் வகுத்தல்
    • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு
    • முறைகள் மற்றும் நுட்பங்கள்.

உதவித் தொகை

தொகு

இந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரையும்; அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

படக்காட்சிகள்

தொகு

இந்திய உயர் கல்வி நிறுவனத்தின் கட்டிடங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "HP Govt. website". Archived from the original on 27 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 August 2006.
  2. "Official website". Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 31 August 2006.

வெளி இணைப்புகள்

தொகு