இந்தோ சரசனிக் பாணி
இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை (Indo-Saracenic இது Indo-Gothic, Mughal-Gothic, Neo-Mughal, Hindoo style என்றும் அழைக்கப்படுகிறது) என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய பேரரசில் குறிப்பாக பிரித்தானிய இந்தியாவிலும், சுதேச சமஸ்தானங்களில் பொது மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட ஒரு கட்டிடக்கலை பாணியாகும். இது இந்திய-இஸ்லாமியக் கட்டிடக்கலை, குறிப்பாக முகலாயக் கட்டிடக்கலை, பிரித்தானிய இந்திய பாரம்பரிய பாணி, சிலசமயம் கொஞ்சம், இந்துக் கோயில் கட்டிடக்கலை ஆகியவற்றின் அலங்கார கூறுகளைக் கொண்டு உருவானது. கட்டிடங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் கட்டமைப்பு போன்றவையானது சமகால கட்டடங்களில் பயன்படுத்தப்பட்ட, அதாவது கோதிக் மறுமலர்ச்சி மற்றும் நியோ-கிளாசிக் போன்றவற்றுடன் குறிப்பிட்ட அளவு இந்திய அம்சங்கள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது. சாரசென் என்பது மத்திய கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள அரபு மொழி பேசும் முசுலிம் மக்களைக் குறிக்க இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்பதமாகும்.
இந்த பாணியானது இந்திய கட்டிடங்களை சித்தரித்த மேற்கத்திய ஓவியங்களைக் கொண்டு 1795 ஆம் ஆண்டில் இருந்து வந்தது. குறிப்பாக வில்லியம் ஹோட்ஜஸ் மற்றும் டேனெல் இரட்டையர்கள் (வில்லியம் டானியல் மற்றும் அவரது மாமா தாமஸ் டேனெல்) போன்றவர்களின் ஓவியங்களில் இருந்து. இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சென்னையில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட சேப்பாக்கம் அரண்மனை ஆகும்.[1] பிரித்தானிய இந்தியாவின் முக்கிய மையங்களாக இருந்த சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை நகரங்களில் இந்த பாணியிலான பல கட்டிடங்களைக் கொண்டுள்ளன, ஆனால் கொல்கத்தா ஐரோப்பிய நியோ-கிளாசிக்கல் பாணியின் கோட்டையாக இருந்தது. இதில் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பாரம்பரிய கட்டடங்கள் என்ற வகைப்பாட்டில், இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ பாரதி வி (27 மே 2017). "இந்தோ-சாரசெனிக் கலையும் சென்னையும்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)