தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்


தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) (राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान), முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும். 1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. [1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.

NIOS
சுருக்கம்NIOS
உருவாக்கம்3 நவம்பர் 1989 (35 ஆண்டுகள் முன்னர்) (1989-11-03)
வகைஅரசு பள்ளிக் கல்வி வாரியம்
தலைமையகம்நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா
தலைமையகம்
  • A-24/25, இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் - 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் - 201 309
ஆட்சி மொழி
இந்தி & ஆங்கிலம்
தலைவர்
ஜே, ஆலம்
தாய் அமைப்பு
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)
வலைத்தளம்www.nios.ac.in

இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக பின்வரும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் காரணமாகத் திகழ்கிறது. 2004-2009 ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகளுக்கு சுமார் 1.5 மில்லியன் மாணவர் சேர்க்கை ஒட்டுமொத்தமாக இருந்தது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350000 மாணவர் சேர்க்கையும் இருக்கிறது.[2]

சர்வதேச ஒருங்கிணைவு மற்றும் வெளிநாட்டு மையங்கள்

தொகு

NIOS பாடத்திட்டம் காமன்வெல்த் கல்வி (COS) மற்றும் யுனெஸ்கோவோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.[3]

இது ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், நேபாளம், கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டவர்களுக்காக அந்த நாடுகளில் கல்வி மையங்களை வைத்திருக்கிறது.[4]

NIOS வழங்கும் படிப்புகள்

தொகு

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் திறந்தநிலை அடிப்படைக் கல்வி திட்டத்தில் மூன்று பின்வரும் படிப்புகள் வழங்குகின்றன:

    • ஓபிஇ 'ஏ' நிலை - மூன்றாம் வகுப்புக்கு இணையாக
    • ஓபிஇ 'பி' நிலை - ஐந்தாம் வகுப்புக்கு இணையாக
    • ஓபிஇ 'சி' நிலை - எட்டாம் வகுப்புக்கு இணையாக
    • உயர்நிலை தேர்வு - பத்தாம் வகுப்புக்கு இணையாக
    • மேல்நிலைத் தேர்வு - பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையாக
    • தொழிற்கல்வி படிப்புகள்
  • வாழ்க்கை செறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
  • தொடக்கக் கல்வி பட்டயச் சான்றிதழ் (இரண்டு ஆண்டுகள்)

மண்டல அலுவலங்கள்

தொகு

மண்டல அலுவலகங்கள் பின்வரும் நகரங்களில் உள்ளது.

  • புதுதில்லி
  • சென்னை - தமிழ்நாடு, புதுச்சேரி
  • பெங்களூர் - கர்நாடகா
  • கொச்சி - கேரளா
  • ஹைதராபாத் - ஆந்திரா, தெலுங்கானா
  • புனா - மகாராஷ்டிரம், கோவா
  • பாட்னா - பீகார்
  • டேஹ்ராடூன் - உத்தாஞ்சல்
  • சண்டிகர் - பஞ்சாப், இமாச்சல்பிரதேசம்
  • அலகாபாத் - உத்தரப்பிரதேசம்,
  • செய்ப்பூர் - இராசத்தான், குசராத்
  • கொல்கத்தா - மேற்குவங்காளம்
  • புவனேசுவர் - ஒரிசா
  • போபால் - மத்தியப்பிரதேசம்
  • ராய்பூர் - சத்தீஸ்கர்

மேற்கோள்கள்

தொகு
  1. "National Institute Of Open Schooling". nios.ac.in. 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  2. "pub_PS_OpenSchooling_web" (PDF). Col.org. பார்க்கப்பட்ட நாள் 2015-07-03.
  3. "International Centre for Training in Open Schooling". Nos.org. 1945-11-16. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  4. Majumdar Sahil, Pallavi (October 15, 2002). "Open school for UAE expats". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/25204180.cms. பார்த்த நாள்: 2013-07-09.