இந்திய தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்

இந்திய அரசூ முயற்சி

இந்திய தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் (Skill India) என்பது பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட பிரச்சாரம்.இதை இந்திய தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் நிர்வகிக்கிறது.

இந்திய தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
Ministryதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
துவங்கியது15 சூலை 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-07-15)
தற்போதைய நிலைசெயலில்
இணையத்தளம்https://www.skillindia.gov.in

வரலாறு

தொகு

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 40 கோடிக்கு மேற்ப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு திறன்களைப் பயிற்றுவிப்பதற்காக திறன் இந்தியா பிரச்சாரம் 25 சூலை 2015 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்டது.[1]

முயற்சிகள்

தொகு

இந்த பிரச்சாரத்தில் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள்:

  • தேசிய திறன் மேம்பாட்டு பணி
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தேசிய கொள்கை, 2015
  • திறன் கடன் திட்டம்
  • கிராமப்புற இந்தியா திறன்

கூட்டாண்மை கருத்து

தொகு

இந்திய தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கிலாந்து இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.இந்த நாட்டின் இளைஞர்கள் மற்ற நாட்டின் பள்ளி முறையை அனுபவிக்கவும்,கலாச்சாரம், மரபுகள் மற்றும் சமூக மற்றும் குடும்ப அமைப்புகள் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளவும்.

திறன் இந்தியா முன்னேற்றங்கள்

தொகு

ஆரக்கிள் 12 பெப்ரவரி 2016 அன்று பெங்களூரில் ஒரு புதிய 2.8 மில்லியன் சதுர அடி வளாகத்தை கட்டப்போவதாக அறிவித்தது.அரக்கிள் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியனுக்கு அதிகமான மாணவர்களுக்கு கணினி அறிவியல் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு முயற்சியை இந்தியவில் 2700 நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துவதன் திட்டமிடபட்டுள்ளது தற்போது 1800 நிறுபனங்கள் இதில் பங்குபெற்றுள்ளது.

யப்பானின் தனியார் துறை,பத்து ஆண்டுகளில் 30,000 பேருக்கு சப்பானிய பாணி உற்பத்தி திறன் மற்றும் நடைமுறைகளில் பயிற்சியளிக்க ஆறு உற்பத்தி நிறுவனங்களை அமைக்க உள்ளது, இதனை கிராமப்புறங்களில் அமைக்க உள்ளன.இந்த நோக்கத்திற்காக பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் இந்தியாவில் சப்பானியநிறுவனஙககளால் நியமிக்கபட்ட பொறியியல் கல்லூரிகளில் சப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் ஆகியவை நிறுவப்படும்.முதல் முன்று நிறுவனங்கள் குஜராத் , கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் 2017 ஆகிய மாநிலத்தில் அமைக்கப்படும்.

செயல்திறன்

தொகு

பெப்ரவரி 15, 2016 நிலவரப்படி ,"இந்திய திறன் மேம்பாட்டு திட்டம்" 51,216 இளைஞர்களுக்கு 100 நாட்களில் பயிற்சி அளித்தது , மேலும் ஆண்டடுதோறும் 1,44,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் தொழிச்சாலை கடுமையான திறன் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது மற்றும் பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலோர் தொழில்துறையால் உள்வாங்கப்படுகிறார்கள்.

நவீன சந்தைக் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஒரு தலைமுறை திறமையான ஊழியர்கள் மற்றும் தலைவர்களைத் தயார்படுத்தும் முயற்சியில், இந்திய திறன் மேன்பாடு திட்டம் 2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்டது.2022 ஆம் ஆண்டில் பல்வேறு தொழில்துறை தொடர்பான திறன்களைக் கொண்ட 40 கோடி குடிமக்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய திறன் மேன்பாடு திட்டம் தொடங்கப்பட்டது.

மேற்கோள்

தொகு
  1. "அரசு திறன் இந்தியா முன்முயற்சி கீழ் 40 கோடி மக்கள் பயிற்சி". எகனாமிக் டைம்சு. 15 சூலை 2015.

வெளியிணைப்பு

தொகு