அ. கா. பெருமாள்
அ.கா.பெருமாள் (A. K. Perumal) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்.[1] களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி.
அ.கா.பெருமாள் | |
---|---|
பிறப்பு | நாகர்கோவில், தமிழ்நாடு | 28 செப்டம்பர் 1947
தொழில் | பணி நிறைவு இணைப்பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1980–இன்று |
கருப்பொருள் | நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம்(1999), நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம்(2001), தென்குமரியின் கதை(2003), தென்னிந்திய தோல்பாவைக்கூத்து(2015), வயல் காட்டு இசக்கி(2015). |
துணைவர் | தேவகுமாரி (லேகா) |
பிள்ளைகள் | ரம்யா |
இணையதளம் | |
akperumal.com |
வாழ்க்கைக் குறிப்புகள்
தொகுநாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்) நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர்.[2] இவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர்.
குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார்.
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார். இவரது ஆய்வுக்கும், பார்வைக்கும் உதவியவர்களில் முக்கியமானவர்கள் அருள்பணி ஜெயபதி மற்றும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.
ஆய்வுத்துறைகள் | நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை |
எழுதிய நூற்கள் | 100 |
பதிப்பித்த நூற்கள் | 16 |
அச்சில் வந்த கட்டுரைகள் | 340 |
கட்டுரை படித்த கருத்தரங்குகள் | 96 |
வெளியிட்ட நூல்கள்
தொகுஇவர் எண்பது நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு,கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும்.[3] கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார்.
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யபப்ட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.
பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்.
குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.
புத்தகங்களின் பட்டியல்
தொகுவ.எண். | நூலின் பெயர் | பதிப்பகம் | ஆண்டு |
---|---|---|---|
1. | நாட்டார் கதைகள் பகுதி 1 | கோமளா ஸ்டோர், நாகர்கோவில் சோபிதம், நாகர்கோவில். |
1978 1986 |
2. | புதிய தமிழில் பழைய கவிதை | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. |
1979 |
3. | கன்னியாகுமரி அன்னை மாயம்மா | கன்னியா பிரசுராலயம், நாகர்கோவில். |
1979 |
4. | தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி | க்ரியா, சென்னை. |
1983 |
5. | கவிமணியின் இன்னொரு பக்கம் | பயோனீர் புக் சர்வீஸஸ், சென்னை. |
1990 |
6. | தொல்பழம் சமயக்கூறுகள் | பயோனீர் புக் சர்வீஸஸ், சென்னை. |
1990 |
7. | ஆய்வுக்கட்டுரைகள் | பத்மா புக்ஸ் ஏஜென்சி, பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1993 1997 2003 2005 2007 |
8. | கன்னியாகுமரி மாவட்ட வரலாறு | சுபா பதிப்பகம், நாகர்கோவில். |
1995 |
9. | நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி | ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட் நாகர்கோவில். | 1995 |
10. | பொதுக்கட்டுரைகள் | பத்மாபுக்ஸ்டால், நாகர்கோவில். |
1997 2000 2001 |
11. | பெயரில் என்ன இருக்கிறது | பத்மா புக்ஸ் ஏஜென்சி, பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1997 |
12. | கோவில் சார்ந்த நாட்டார் கலைகள் | வருண் பதிப்பகம், நாகர்கோவில். |
1997 |
13. | பொன்னிறத்தாள்கதை (ப.ஆ) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
1997 |
14. | தோல்பாவைக் கூத்து | வருண் பதிப்பகம், நாகர்கோவில். |
1998 |
15. | வில்லுப்பாட்டுப் புராணக்கதைகள் | வருண் பதிப்பகம், நாகர்கோவில். |
1998 |
16. | முல்லைப்பாட்டு (உரையும் விளக்கமும்) | உமா பதிப்பகம், சென்னை. |
1998 |
17. | குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும் | வருண் பதிப்பகம், நாகர்கோவில். |
1999 |
18. | தம்பிமார் கதை (ப.ஆ) (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) | ஆசியவியல் நிறுவனம், சென்னை. |
1999 |
19. | நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
1999 |
20. | நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம் | மக்கள் வெளியீடு, சென்னை. |
1999 |
21.அ. | தமிழ் இலக்கிய வரலாறு | நிர்மால்யம், நாகர்கோவில். |
2000 2001 2002 2003 2004 |
21.ஆ. | தமிழ் இலக்கிய வரலாறு | சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். (முழுவதும் திருத்தப்பட்ட பதிவு) |
2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 |
22. | இராம கீர்த்தனம் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2000 |
23. | நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் | தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம், சென்னை. |
2001 |
24. | கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் (மொ.ப) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2001 |
25. | நாட்டுப்புற மகாபாரதக் கதைகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2001 |
26. | குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ) | தன்னனானே பாங்களுர். | ஜுன், டிச.2001 |
27. | சுசீந்திரம் கோவில் | வருண் பதிப்பகம், நாகர்கோவில். |
2001 |
28. | கம்பரின் தனிப்பாடல்கள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2001 |
29. | இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2002 |
30. | தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம், சென்னை. |
2002 |
31. | கவிமணியின் கவிதைகள் முழுதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2002 |
32. | ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2003 |
33. | பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் | ரோகிணி ஏஜென்சிஸ், நாகர்கோவில். |
2003 |
34. | இராமாயணத் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம், சென்னை. |
2003 |
35. | தெய்வங்கள் முளைக்கும் நிலம் | தமிழினி, சென்னை. |
2003 |
36. | குருகுல மக்கள் கதை (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை. |
2003 |
37. | தென்குமரியின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை |
2003 |
38. | நல்லதங்காள் (ப.ஆ) | தன்னனானே பதிப்பகம், சென்னை |
2004 |
39. | நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி | தமிழினி, சென்னை. |
2004 |
40. | ஒரு குடும்பத்தின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
2004 |
41. | வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
2004 |
42. | கவிமணியின் கட்டுரைகள் | தமிழினி, சென்னை. |
2004 |
43. | கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் | தமிழினி, சென்னை. |
2004 |
44. | சனங்களின் சாமி கதைகள் | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
2004 |
45. | சித்தூர் தளவாய் மாடன் கதை (ப.ஆ) | காவ்யா, சென்னை | 2004 |
46. | கானலம் பெருந்துறை (ப.ஆ) | தமிழினி, சென்னை. |
2005 |
47. | அலைகளினூடே (ப.ஆ) | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
2005 |
48. | முதலியார் ஆவணங்கள் (ப.ஆ) | தமிழினி, சென்னை. |
2005 |
49. | காகங்களின் கதை | காலச்சுவடு அறக்கட்டளை, நாகர்கோவில். |
2005 |
50. | சுண்ணாம்பு கேட்ட இசக்கி | யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை. |
2005 |
51. | ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் | தமிழினி, சென்னை. |
2006 |
52. | தாணுமாலையன் ஆலயம் | தமிழினி, சென்னை. |
2008 |
53. | வாழ்வை நகர்த்தும் கலைஞன் | முத்து பதிப்பகம், சென்னை. |
2008 |
54. | நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2008 2010 2016 |
55. | குடிபோதை - புனைவுகள் தெளிவுகள், (ப.ஆ) | தமிழினி, சென்னை. |
2008 |
56. | படிக்கக் கேட்ட பழங்கதைகள் | மருதம் வெளியீடு, நெய்வேலி. |
2008 |
57. | அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2009 |
58. | சடங்கில் கரைந்த கலைகள் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2009, 2010 |
59. | இராமன் எத்தனை இராமனடி | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2010 |
60. | சிவாலய ஓட்டம் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2011 |
61. | காலந்தோறும் தொன்மங்கள் | தமிழினி, சென்னை. |
2011 |
62. | உணவுப் பண்பாடு | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
2012 |
63. | தென்குமரியின் சரித்திரம் | சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். |
2012, 2013 |
64. | அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2012 |
65. | தென்குமரிக் கோவில்கள் | சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். |
2014 |
66. | தமிழர் கலையும் பண்பாடும் | பாவை பதிப்பகம், சென்னை. |
2014 |
67. | Kavimani Desivinayagam Pillai Historical Research Articles (Edi) | Raghav Publication, Nagercoil. |
2015 |
68. | Desivinayagam Pillai Kandalar Salar (Edi) | Raghav Publication, Nagercoil. |
2015 |
69. | வயல் காட்டு இசக்கி | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2015 |
70. | தென்னிந்திய தோல்பாவைக்கூத்து | காவ்யா, சென்னை, |
2015 |
71. | திருக்கோயில்கள் வழிகாட்டி கன்னியாகுமரி மாவட்டம் | தமிழக அரசு. | 2015 |
72. | மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொருபக்கம் | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
2016 |
73. | முதலியார் ஓலைகள் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். |
2016 |
74. | இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை | காவ்யா சென்னை |
2017 |
75. | சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் |
2018 |
76. | பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் | என்.பி.எச், சென்னை |
2018 |
77. | கவிமணி வராற்றாய்வாளர் | என்.பி.எச், சென்னை | 2018 |
78. | வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி | காவ்யா, சென்னை | 2018 |
79. | தமிழறிஞர்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2018 |
80. | தமிழர் பண்பாடு (பிற். சோழர் காலம் வரை) | என்.சி.பி.எச்., சென்னை | 2018 |
81. | கவிமணியின் கட்டுரைகள் | காவ்யா, சென்னை | 2019 |
82. | பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2020 |
83. | பூதமடம் நம்பூதிரி[4] | காலச்சுவடு, நாகர்கோவில் | 2020 |
84. | அடிமை ஆவணங்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2021 |
85. | கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் | சுதர்சன் புக்ஸ் & கிராப் பிட்ஸ், நாகர்கோவில் | 2021 |
86. | தமிழக வரலாறும் பண்பாடும் | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2021 |
87. | தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2021 |
88. | A History of South Kumari | Sudarsan Books and Crafts, Nagercoil | 2021 |
89. | மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்வும் பணியும் | நெஸ்லிங் புக்ஸ் பல்லிஷிங் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (M)விட், சென்னை | 2021 |
90. | தமிழ்க் கதைப்பாடல்கள் | காவ்யா பதிப்பகம், சென்னை | 2022 |
91. | தமிழ்ச் சான்றோர்கள் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2022 |
92. | கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2022 |
93. | கவிமணி கவிதைகள் | காவ்யா பதிப்பகம், சென்னை | 2023 |
94. | அத்யாத்ம ராமாயணம் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2023 |
95. | தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2023 |
96. | படக்காரன் சொன்ன கருட புராணம் (தென்குமரிச் செய்திகள்) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | 2023 |
97. | அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும் | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2023 |
98. | மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள் | பரிசல், சென்னை | 2024 |
99. | இசக்கியால் வந்த சண்டை | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2024 |
100. | நித்தியவல்லியின் கடனக்கழிப்பு | காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் | 2024 |
தமிழக அரசு பரிசு
தொகுஇவர் எழுதிய "தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004).
பெற்ற பாராட்டுகள்
தொகு- 2023 மார்ச் 5
- வாழ்நாள் சாதனையாளர் விருது, ஜீவா அறக்கட்டளை, ஈரோடு
- 2021 ஜனவரி 2
- கவிமணி விருது தமிழ்நாடு பேச்சாளர் சங்கம், பாலபிரஜாதிபதி அன்புவனம் இணைந்து சாமி தோப்பு ஊரில் அன்புவனம் தோட்டத்தில் நடந்தது.
- 2018 மார்ச் 18
- பாராட்டு சித்திரமும் கைப்பழக்கம் அமைப்பு, திருநெல்வேலி.
- 2017 ஆகஸ்ட் 19
- Great contribution Award from People Parliament for unity and development, Kanyakumari.
- 2013 ஜனவரி 20
- செந்தமிழ் அருள்நெறிப் பேரவை, நாகர்கோவில் பெற்ற விருது - நாட்டார் வழக்காற்றியல் ஆய்வர்.
- 2008 நவம்பர் 30
- ஜெயமோகன் ஏற்பாட்டில் நாகர்கோவில் A.P.N பிளாசாவில் அ.கா.பெருமாள் 60 பாராட்டு.
- 2006 ஆகஸ்ட் 25
- ஜீவா நூற்றாண்டு விழாவில் (பூதப்பாண்டி) த.மு.எ.ச. பாராட்டு - ‘மக்கள் வரலாற்று ஆய்வாளர்’.
- 2005 ஆகஸ்ட் 14
- தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் சங்கம் பாராட்டு. இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில்.
- 2005 நவம்பர் 15
- கவிமணி பற்றிய நூற்கள் எழுதியமைக்குக் கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டு.
இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில். - 2005 டிசம்பர் 21
- சென்னை தமிழ் அரங்க அமைப்பு கன்னியாகுமரியில் நடத்திய விழாவில் ‘தமிழ்மாமணி’ என்ற விருது வழங்கியது.
- 2004 ஏப்ரல் 03
- நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி. கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்களுக்குப் பாராட்டு விழா.
- 2004 ஜூலை 29
- தென்குமரியின் கதை நூலுக்கு அரசு பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பாராட்டு. இடம் - நாகர்கோவில் பெருமாள் மண்டபம்.
- 2003 ஜனவரி 14
- கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம், நாகர்கோவில். பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பாராட்டு. பெற்ற பட்டம், ஆய்வுச்செம்மல்.
- 2003 செப்டம்பர் 10
- கோட்டாறு நாராயணகுரு மண்டபத்தில் நடந்த நாராயணகுரு பிறந்த நாள் விழா. பாராட்டியவர் சுவாமி விசுத்தானந்தா ‘நாராயணகுரு’ நூல் எழுதியதற்குப் பாராட்டு.
- 2001 செப்டம்பர் 26
- கவிமணி நினைவு விழாவில், (புத்தேரி) கவிமணி நினைவு அறக்கட்டளை சார்பில் கவிமணி பற்றி நூல் எழுதியமைக்குப் பாராட்டு பாராட்டியவர். கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி.
பிற செய்திகள்
தொகு- பொது ஆசிரியர் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்.
- திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையங்களில் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட உரை நிகழ்த்தியமை.
- திருவனந்தபுரம் தூர்தர்சனில் நல்லதங்காள் தோல்பாவைக்கூத்து குறித்துப் பேசி, நிகழ்ச்சி நடத்தியமை (24.07.1992)
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்’. வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியமை.
- கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)
- பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ (நாட்டார் வழக்காற்றியல்) பாடத்திட்டத்தில் ‘நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி’ நூல் பாடமாக உள்ளது. (1997 முதல்)
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் பாடமாக இருந்தமை (2001 முதல் )
- திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக இருந்தமை (2003-2006)
- “பொன்னிறத்தாள்கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக இருந்தமை (2002-2005)
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக உள்ளது (2003 முதல்)
- குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாற்று பாடமாக உள்ளது (2007)
- ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
- ஆலோசகர், தமிழக்க கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
- செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
- ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
- ↑ பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும்: அ. கா. பெருமாள் நேர்காணல் தி இந்து July 19, 2014
- ↑ "அ.கா.பெருமாள் நாட்டார்கதை ஆய்வாளர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.
- ↑ "புத்தக வெளி". www.dinamani.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.