வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan, 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.

வெங்கட் சாமிநாதன்
பிறப்பு1933
உடையாளூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு21 அக்டோபர் 2015 (அகவை 81–82)
பெங்களூர், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், திறனாய்வாளர்

இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.[1]. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது[2]

புத்தகங்கள்

தொகு
  • தொடரும் பயணம் - இலக்கிய வெளியில்
  • நினைவுகளின் சுவட்டில் - (சுய சரிதம்)

விமர்சனம்

தொகு
  • பாலையும் வாழையும்
  • பான் ஸாய் மனிதன்
  • இச்சூழலில் (கலாச்சார விமர்சனம்)
  • கலை வெளிப்பயணங்கள் (கலை விமர்சனம்)
  • திரை உலகில் (திரைப்பட விமர்சனம்)
  • என் பார்வையில் சில கவிதைகள்
  • என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்
  • ஓர் எதிர்ப்புக்குரல் : காலத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி

கட்டுரைகள்

தொகு
  • அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்)
  • பாவைக்கூத்து
  • சில இலக்கிய ஆளுமைகள்
  • இன்றைய நாடக முயற்சிகள்
  • கலை, அனுபவம், வெளிப்பாடு
  • விவாதங்கள் சர்ச்சைகள்
  • கலை உலகில் ஒரு சஞ்சாரம்

தொகுப்பு

தொகு
  • தேர்ந்தெடுத்த ந.பிச்சமூர்த்தி கதைகள் (தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)
  • பிச்சமூர்த்தி நினைவாக (பிச்சமூர்த்தி நினைவஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு , தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)

மொழிமாற்றம்

தொகு
  • A Movement for Literature (தமிழில் எழுதியவர் : க.நா.சுப்பிரமணியம்)
  • Mother has committed a murder (தமிழில் எழுதியவர் : அம்பை)
  • தமஸ் (இருட்டு) (இந்தி நாவல் . எழுதியவர்: பீஷ்ம ஸாஹ்னி )
  • ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைகள் கதைகள், சுற்று சூழல் பற்றியவை, ஜப்பானிய மூலம்)

நேர்காணல்

தொகு
  • உரையாடல்கள் (நேர்காணல்கள் தொகுப்பு)

திரைப்பிரதிகள்

தொகு

பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள்

தொகு
  • என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன். - க.நா.சு
  • சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி. சு. செல்லப்பா
  • தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான் - சுந்தர ராமசாமி
  • எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும் கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமரிசனம் - கோமல் சுவாமிநாதன்

மேற்கோள்கள்

தொகு
  1. "அக்ரஹாரத்தில் கழுதை". Archived from the original on 2004-12-12. பார்க்கப்பட்ட நாள் 2005-04-08.
  2. தமிழ் இலக்கியத் தோட்டம், டொரொண்டோ

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கட்_சாமிநாதன்&oldid=4159469" இலிருந்து மீள்விக்கப்பட்டது