க. நா. சுப்ரமண்யம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(க.நா.சுப்பிரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam, கந்தாடை சுப்ரமணியம், ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

க.நா.சு
க. நா. சுப்ரமண்யம்.jpg
பிறப்புக. நா. சுப்ரமண்யம்
சனவரி 31, 1912(1912-01-31)
வலங்கைமான்,திருவாரூர் மாவட்டம்
இறப்புதிசம்பர் 18, 1988(1988-12-18) (அகவை 76)
தேசியம்இந்தியா
அறியப்படுவதுமொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.[1][2][3][4][5][6][7]

தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க. நா. சு வின் மருமகன். எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார்[சான்று தேவை]. தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி க.நா.சு. [சான்று தேவை]

படைப்புகள்தொகு

(பட்டியல் முழுமையானதல்ல)

புதினங்கள்தொகு

 • அசுரகணம்
 • ஏழு பேர்
 • ஒரு நாள்
 • கோபுரவாசல்
 • சக்தி விலாசம்'
 • சர்மாவின் உயில்
 • நடுத்தெரு
 • பசி
 • பித்தப்பூ
 • புழுதித்தேர்
 • பொய்த்தேவு
 • மாதவி (வரலாற்றுப் புதினம்) [8]
 • மால்தேடி
 • வாழ்வும் தாழ்வும்'

சிறுகதைத் தொகுப்புகள்தொகு

 • ஆடரங்கு
 • கருகாத மொட்டு
 • மணிக்கூண்டு
 • பெண் மனம்
 • தோள்

இலக்கிய விமர்சனம்தொகு

 • இலக்கிய விசாரம்
 • உலகத்து சிறந்த நாவல்கள்
 • படித்திருக்கிறீர்களா
 • விமர்சனக் கலை

மொழிபெயர்ப்புகள்தொகு

 • அன்புவழி
 • தபால் காரன்
 • நிலவளம் (நட்ஹாம்சன்)
 • மதகுரு (நோபல் பரிசுபெற்றது)[9]
 • மிருகங்கள் பண்ணை (அனிமல் ஃபார்ம்)

தகைமைகளும் விருதுகளும்தொகு

 • சாகித்ய அகாதெமி விருது (1986)
 • தமிழ்நாடு அரசு சிறுகதை விருது- கோதை சிரித்தாள்
 • குமரன் ஆசான் விருது

மேற்கோள்கள்தொகு

 1. Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
 2. Mohan, C. நடைவழிக் குறிப்புகள் .. அகரம் வெளியீடு.. http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_1345.html. 
 3. "Ka. Naa. Su Profile". Tamil Authors.com. பார்த்த நாள் 5 August 2010.
 4. "க.நா. சுப்ரமணியம்(1912-1988)" (Tamil). Encyclopedia of Tamil criticism. University of Kerala. பார்த்த நாள் 5 August 2010.
 5. "Literary feuds" (Tamil). Andhimazhai. பார்த்த நாள் 5 August 2010.
 6. "க.நா.சு. உருவாக்கிய புரட்சி" (Tamil). Uyirmmai. பார்த்த நாள் 5 August 2010.
 7. "நாட்டுடமையான 3 தமிழறிஞர் படைப்புகள்" (Tamil). OneIndia. பார்த்த நாள் 5 August 2010.
 8. கோவி.மணிசேகரன்; தமிழும் இன்றைய இலக்கியங்களும்; கிருட்டிணகிரி, பசவே சுவரா பிரசுரம்; 1963
 9. https://www.nlb.gov.sg/biblio/203130524

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._நா._சுப்ரமண்யம்&oldid=3131846" இருந்து மீள்விக்கப்பட்டது