வெ. வேதாசலம்

வெ. வேதாசலம் (பிறப்பு: டிசம்பர் 20, 1949) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் பிறந்த இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.தொல்லியல் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி அத்துறையின் முதுநிலைக் கல்வெட்டு ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பல தொல்லியல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். அகழ்வாய்வுகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் மா. சந்திரமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய "பராக்கிரம பாண்டியபுரம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

[[பகுப்பு: தமிழக தொல்லியல் ஆய்வாளர்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._வேதாசலம்&oldid=3614081" இலிருந்து மீள்விக்கப்பட்டது