அரங்க. சுப்பையா

அரங்க. சுப்பையா (பிறப்பு: அக்டோபர் 20, 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் கரந்தையிலுள்ள த. உ. க. கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். “ஒற்றுப்பிழையின்றி எழுத”, “பெரியபுராணப் பதிப்பு வரலாறு” என்பது போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்திய இலக்கியம் - படைப்பும் படைப்பாளிகளும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்க._சுப்பையா&oldid=3055534" இருந்து மீள்விக்கப்பட்டது