மா. ஆண்டோ பீட்டர்
மா. ஆண்டோ பீட்டர் (ஏப்ரல் 26, 1967 - சூலை 12, 2012) தமிழக எழுத்தாளரும் மென்பொருள் உருவாக்குனரும் ஆவார். இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும், கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, ஆறுமுகநேரி எனும் ஊரில் பிறந்தவர். கணினி மென்பொருள் துறையில் 3 ஆண்டு பட்டயப்படிப்பையும், கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், மேலாண்மையியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கும் இவர் சென்னையில் சாஃப்ட்வியூ எனும் பெயரில் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தவர். இதன் மூலம் தமிழ் மென்பொருள் தயாரித்தல், கணினி, இணையம், பல்லூடகம், எழுத்து வரைகலை, அசைவூட்டம், காட்சி சார் தொடர்பு போன்ற கணினி சார்ந்த துறைகளுக்கு தமிழில் பயிற்சியும் அளித்து வந்தார்.
மா. ஆண்டோ பீட்டர் | |
---|---|
பிறப்பு | மா. ஆண்டோ பீட்டர் ஏப்ரல் 26, 1967 ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இறப்பு | சூலை 12, 2012 சென்னை | (அகவை 45)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | 1. மூன்றாண்டு கணினிப் பட்டயம் 2. கணிதத்தில் இளங்கலைப் பட்டம் 3. மேலாண்மையியலில் முதுகலைப் பட்டம் |
பணி | தமிழ் மென்பொருள் வல்லுனர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | கிறித்துவம் |
பெற்றோர் | மார்சீலீன் பர்னாந்து, ராசாத்தி பர்னாந்து |
வாழ்க்கைத் துணை | ஸ்டெல்லா |
பிள்ளைகள் | 1. அமுதன் (மகன்) 2. அமுதினி (மகள்) |
வலைத்தளம் | |
www.softview.in antopeter |
சிறப்புகள்
தொகு- கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
- அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளையும் இணையதளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.[1] தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 ல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.[2]
எழுதியுள்ள நூல்கள்
தொகுஇவர் கணினியியல் தொழில்நுட்பம் தொடர்பான நூல்களைத் தமிழில் எழுதி வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களின் பட்டியல் இது.
- டிடிபி -அச்சுக்கோர்ப்புக் கையேடு
- இன்டெர்நெட் கையேடு
- 24 மணி நேரத்தில் இன்டெர்நெட் - ஈ மெயில்
- தமிழ் டைப்பிங் செய்வது எப்படி?
- தமிழும் கணிப்பொறியும்
- மல்டிமீடியா அடிப்படைகள்
- கணினி கலைச்சொற்கள்
- கம்ப்யூட்டர் படிப்புகள்
- கம்ப்யூட்டர் கேள்வி பதில்
- கம்ப்யூட்டரில் என்ன படிக்கலாம்?
- மல்டிமீடியா கேள்வி பதில்
- கம்ப்யூட்டர் தொழில்கள்
- கிராபிக்ஸ் & அனிமேசன்ஸ்
- செல்பேசி கலைச்சொற்கள்
- வேலைக்கு ரெடியா?
- கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளுங்கள்
- செல்பேசித் துறைக்கான கலைச்சொற்கள்
- கீபோர்டு ஷார்ட்கட்
- கம்ப்யூட்டர் வைரஸ்
- அடோபி பிரிமீயர்
பொறுப்புகள்
தொகுகணித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும்[3], தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராகவும்[4] இருந்தவர். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இவர் வகித்த மேலும் சில பொறுப்புகள்;
- தமிழ் மென்பொருள் மானியக் குழு உறுப்பினர் - தமிழ்நாடு அரசு
- தமிழ் விசைப்பலகைகள் சீர்திருத்தக் குழு உறுப்பினர் - தமிழ்நாடு அரசு
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குழு உறுப்பினர் - தமிழ்நாடு அரசு
- மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மின்நூலகக் குழு உறுப்பினர் - இந்திய அரசு
- 12 வது ஐந்தாண்டுத் திட்டக் குழுவின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் - தமிழ்நாடு அரசு
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்.
- 16 பிட் ஒருங்குறி தமிழ் சீர்திருத்தக் குழு உறுப்பினர்
- டாக்டர். உ.வே.சா நூல்நிலைய ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்[5]
- தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளர் (ஏப்ரல் 2012 முதல்) [6]
- உத்தமம் (infitt) நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்.
விருதுகள்
தொகு- இவர் எழுதிய "தமிழும் கணிப்பொறியும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது - 2007
- ஸ்ரீராம் நிறுவனத்தின் “பாரதி இலக்கியச் செல்வர் விருது” - 2010
- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் “பெரியார் விருது” - 2012.[7]
மறைவு
தொகுஇவர் சென்னையில் சூலை 12, 2012 அன்று மாரடைப்பால் காலமானார்.[8],[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ தேனி எம். சுப்பிரமணி எழுதிய “தமிழ் இணையச் சிற்றிதழ்கள் (நூல்)”, பக்கம் 11
- ↑ அண்ணா கண்ணன் எழுதிய “தமிழில் இணைய இதழ்கள்” நூல் பக்கம் 25
- ↑ "கணித்தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பட்டியல்". Archived from the original on 2012-07-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
- ↑ Tamil Heritage Foundation
- ↑ "டாக்டர். உ.வே.சா நூல்நிலைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் - 2012". Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.
- ↑ தமிழ் வளர்ச்சிக் கழக பொறுப்பாளர்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விடுதலை". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
- ↑ சாப்ட்வியூ நிறுவன அதிபர் ஆண்டோ பீட்டர் திடீர் மரணம் பரணிடப்பட்டது 2012-07-14 at the வந்தவழி இயந்திரம் (மாலைமலர் செய்தி)
- ↑ காலமானார் "சாப்ட் வியூ' நிறுவனர் ஆண்டோ பீட்டர்[தொடர்பிழந்த இணைப்பு] (தினமணி செய்தி)
வெளி இணைப்புகள்
தொகு- மா. ஆண்டோ பீட்டர் உருவாக்கிய தமிழ் சினிமா இணைய இதழ் குறித்த பத்திரிகைச் செய்திகள் தொகுப்பு பரணிடப்பட்டது 2012-01-27 at the வந்தவழி இயந்திரம் (பிடிஎப் வடிவம்)