ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி (ஆங்கிலம்:Arumuganeri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஆறுமுகநேரி
—  பேரூராட்சி  —
ஆறுமுகநேரி
அமைவிடம்: ஆறுமுகநேரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°34′05″N 78°05′37″E / 8.568100°N 78.093700°E / 8.568100; 78.093700
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 27,266 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


30 மீட்டர்கள் (98 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/arumuganeri


இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ள காயல்பட்டினம் ஆகும்.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,968 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 27,266 ஆகும்[5][6]

30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

சிவன் கோவில்

தொகு

ஆறுமுகநேரியில் இரண்டு சிவன் கோவில் உள்ளது இதில் சோமநாத சாமி கோவில்


பெரிய கோவில் மற்றும் ஆறுமுகநேரி அதிக மக்கள் வரும் கோவில்

இந்த கோவில் சந்தை அருகில் உள்ளது அல்லது மதுரையிலிருந்து திருச்செந்துர் செல்லும் சாலையில் அறுமுகநேரி உள்ளது

பெயர் வரலாறு

தொகு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக காவடி தூக்கி வரும் பக்தகோடிகள், திருச்செந்தூரில் உறையும் ஆறுமுகப்பெருமானைக் கண்டு வணங்கி வழிபட நேர் வழியாக இவ்விடம் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள நகரம் என்பதால் ஆறுமுகநகரி என்று வழங்கப்பட்டு, பின்னர் ஆறுமுகநேரி என்று மருவி தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

முக்கிய தொழில்கள்

தொகு

உப்பு வியாபாரம், நெல் சாகுபடி, முருங்கைக்காய் வியாபாரம், சந்தை வியாபாரம், தொழிற்சாலைப்பணி போன்றவை இவ்வூர் மக்கள் செய்து வரும் முக்கியத் தொழிலாகும்.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 8°34′N 78°07′E / 8.57°N 78.12°E / 8.57; 78.12 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. KZY/Kayalpattinam Railway Station
  5. ஆறுமுகநேரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. >Arumuganeri Town Panchayat
  7. "ஆறுமுகநேரி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  8. "Arumuganeri". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுகநேரி&oldid=3948588" இலிருந்து மீள்விக்கப்பட்டது