உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

இன்பிட் மன்றம்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களைக் கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக ஜூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

உத்தமம் INFITT
வகைபன்னாட்டு நிறுவனம்
நிறுவப்பட்டதுசூலை 24, 2000 [1]
தோற்றம்2000-ஆம் ஆண்டு மூன்றாம் தமிழ் இணைய மாநாட்டின் பொழுது சிங்கப்பூரில் உருவானது
சேவை புரியும் பகுதிஉலகனைத்தும்
Focusதகவல் தொழில்நுட்பம், தமிழ்மொழி [2]
வழிமுறைகருத்தரங்குகள், வெளியீடுகள், அரசுகளுடனும் நிறுவனங்களுடனும் இடைமுகமாக இருத்தல்
இணையத்தளம்www.infitt.org

இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2009-ஆம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.

கோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு

தொகு

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சூன் திங்கள் 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்; அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இங்குக் கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

உத்தமம் நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் பட்டியல்

தொகு

இதுவரை 21 தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன.[3]

மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்
மாநாடு ஆண்டு இடம்
முதல் தமிழ் இணைய மாநாடு 1997 சிங்கப்பூர்
இரண்டாம் தமிழ் இணைய மாநாடு 1999 சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மூன்றாம் தமிழ் இணைய மாநாடு 2000 சிங்கப்பூர்
நான்காம் தமிழ் இணைய மாநாடு 2001 கோலாலம்பூர், மலேசியா
ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு 2002 கலிஃபோர்னியா, அமெரிக்கா
ஆறாம் தமிழ் இணைய மாநாடு 2003 சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஏழாம் தமிழ் இணைய மாநாடு 2004 சிங்கப்பூர்
எட்டாம் தமிழ் இணைய மாநாடு 2009 கொலோன், செருமனி
ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு 2010 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பத்தாவது தமிழ் இணைய மாநாடு 2011 பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு 2012 சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா
பன்னிரண்டாவது தமிழ் இணைய மாநாடு 2013 கோலாலம்பூர், மலேசியா
பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரி, தமிழ்நாடு,இந்தியா
பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூர்
பதினைந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா
பதினாறாவது தமிழ் இணைய மாநாடு 2017 கனடா பல்கலைக்கம், டெரன்டா
பதினேழாவது தமிழ் இணைய மாநாடு 2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
பதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு 2019 அண்ணா பல்கலைக்கழகம் . சென்னை, தமிழ் நாடு . இந்தியா
பத்தொன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2020 மெய் நிகர் (Virtually) வடிவு
இருபதாவது தமிழ் இணைய மாநாடு 2021 மெய் நிகர் (Virtually) வடிவு
இருபத்தோராவது தமிழ் இணைய மாநாடு 2022 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், இந்தியா
இருபத்திரண்டாவது தமிழ் இணைய மாநாடு 2023 கோயம்புத்தூர்
இருபத்து மூன்றாவது தமிழ் இணைய மாநாடு 2024 டெக்சஸ் பல்கலைக் கழகம், அமெரிக்கா

தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள்

தொகு

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ்ச் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துகள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "உத்தமம் தொடக்கம்". web.archive.org. Archived from the original on 2000-12-11. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2021.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "INFITT Objectives". INFITT. January 1, 2013. பார்க்கப்பட்ட நாள் June 16, 2014.
  3. "INFITT Conferences". பார்க்கப்பட்ட நாள் 2023-10-19.
  4. தமிழ் இணைய மாநாடுகள் - வரலாற்றுக் குறிப்புகள்

வெளி இணைப்புகள்

தொகு