எட்டாம் தமிழ் இணைய மாநாடு
தமிழ் இணைய மாநாடு 2009 இல் யேர்மனியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. இது உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும், கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. இங்கு பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பான்மை ஆங்கிலத்தில் மட்டும் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக்கட்டுரைப் பிரிவுகள்
தொகு- கணினி உதவியுடன் தமிழை கற்றலும், கற்பித்தலும் - Computer Assisted Learning and Teaching of Tamil
- புலத் தமிழர்கள், தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தலும், தொழில்நுட்பத்தின் தாக்கமும் - Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology
- தமிழ் வலைவாசல்: வலைப்பதிவு, வலைப்பதிவுத் திரட்டி, விக்கிப்பீடியா - Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.
- தமிழ் தன்மொழியாக்கம், தமிழ் தட்டச்சு, கட்டற்ற திறமூல மென்பொருட்கள் - Tamil localization, Tamil keyboard, open-source software etc.
- இயற்கை மொழி முறையாக்கம், ஒளி எழுத்துணரி , தகவல் மீட்டெப்பு, செயற்கை அறிவாண்மை - Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence etc.
- கைக்கருவிகளில் தமிழ், நகர்பேசி, சிறப்புத் தேவைகள் உடையோருக்குத் தமிழ் - Tamil in handheld, mobile phones, Tamil for special needs
- மின்பதிப்பின் ஒருங்கிணைப்பு, களஞ்சியம், தேடு பொறிகள் - Preparation E-Texts, Corpora, Search Engines
- கணிமை மொழியியல் - Computational Linguistics
- இயற்கை மொழி முறையாக்கம்: - உருபனியல் அடையாளம்காட்டிகள் - Natural Language Processing: Morphological Tagger
- தமிழ் கலைச்சொற் தரவுத்தளம் - Database of Tamil technical terms and glossaries
- இணையத் தமிழ் இலக்கியத் தரவுத்தளம், தமிழ் அகராதிகள், தேடு பொறிகள் - Online Database of Tamil literature, Tamil Dictionaries and Search Engines
விமர்சனங்கள்
தொகு2009 தமிழ் இணைய மாநாடு பற்றி கடுமையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மாநாடும், ஆய்வுக் கட்டுரைகளும், மாநாட்டு வலைத்தளமும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்தது மாநாட்டின் இலக்குக்கு நேர் எதிர்மாறானது என்று கூறப்பட்டது.
மாநாடு எடுத்த பரிந்துரைகள் ஆகிய "இதழ் பிரசுரிப்பது, சென்னையில் செயலகம் நடத்துவது, விருது அளிப்பது" என எல்லாம் அரச தயவில் நடத்த வேண்டும் என்று எதிர்பாப்பது, தமிழ் இணைய மாநாடு அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கு உட்படும் என்று விமர்சிக்கப்பட்டது.[1]