மூன்றாம் தமிழ் இணைய மாநாடு

மூன்றாவதாக “தமிழ் இணைய மாநாடு 2000” மாநாடு இலங்கையைச் சோ்ந்த கொழும்புவில் தோட்டத் தொழிலாளா்களின் அமைச்சா் தொண்டமான் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணமாக சிங்கப்பூரில் ஜீலை மாதம் 22-24 ஆம் நாட்களில் நடைபெற்றது.

உத்தமம் தொடக்கம்தொகு

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் உத்தமம் (INFITT) தொடங்கி வைக்கப்பட்டது.

மாநாட்டின் செயல்பாடுகள்தொகு

இம்மாநாட்டில் இணையதளப் பெயா்கள், தமிழ் எழுத்துரு கலைச்சொல்லாக்கம், ஒருங்குறி முறை ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டின் வழியாக உலக அளவில் அனைவரும் தமிழ் இணைய மாநாட்டின் செய்திகளை அறிந்துகொள்ள WWW.infitt. Org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தன. இம்மாநாட்டின் இறுதி விழாவில் சிங்கப்பூர் அதிபா் எஸ். ஆர். நாதன் கலந்து கொண்டார்.

குறிப்புதொகு

  • முனைவர் துரை.மணிகண்டன், எழுதிய இணையமும் தமிழும் என்ற நூல்.
  • முனைவர் மு.பொன்னவைக்கோ, எழுதிய இணையத்தமிழ் வரலாறு என்ற நூல்.