தமிழ் இணைய மாநாடுகள்

(தமிழ் இணைய மாநாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 11 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்; [1]

 1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
 2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
 3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
 4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.
 5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.
 6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
 7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
 8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.
 9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு- 2010 ஆம் ஆண்டு - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
 10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.
 11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.
 12. பன்னிரண்டாவது தமிழ் இணைய மாநாடு - 2013 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.
 13. பதிமூன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2014 ஆம் ஆண்டு - புதுச்சேரி, தமிழ்நாடு,இந்தியா.
 14. பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2015 ஆம் ஆண்டு - சிங்கப்பூர், சிங்கப்பூர்.
 15. பதினைந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2016 ஆம் ஆண்டு - திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா.
 16. பதினாறாவது தமிழ் இணைய மாநாடு - 2017 ஆம் ஆண்டு - கனடா பல்கலைக்கம், டெரன்டா.
 17. பதினேழாவது தமிழ் இணைய மாநாடு - 2018 ஆம் ஆண்டு - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
 18. பதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு - 2019 ஆம் ஆண்டு - அண்ணா பல்கலைக்கழகம் . சென்னை, தமிழ் நாடு . இந்தியா
 19. பத்தொன்பதாவது தமிழ் இணைய மாநாடு - 2020 ஆம் ஆண்டு மெய் நிகர் (Virtually) வடிவில் நடந்தது
 20. இருபதாவது தமிழ் இணைய மாநாடு - 2021 மெய்நிகர் (Virtually) நடந்தது
 21. இருபத்தோராவது தமிழ் இணைய மாநாடு - 2022 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், இந்தியா

மேற்கோள்கள்

தொகு
 1. "INFITT Conferences". பார்க்கப்பட்ட நாள் 2023-10-19.

இதையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இணைய_மாநாடுகள்&oldid=3812066" இலிருந்து மீள்விக்கப்பட்டது