பத்தாவது தமிழ் இணைய மாநாடு

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில் பத்தாவது தமிழ் இணைய மாநாடு அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு சூன் 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ் இணையம் 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.

ஆய்வரங்குகள்தொகு

இம்மாநாட்டில் கீழ்காணும் 10 தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடத்தப்பட உள்ளன.

  1. கணினியினூடே செம்மொழி
  2. கணனி/இணையம் வழி தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல்
  3. செயற்கைத் திறனாய்வு
  4. கணினி மொழியியல்
  5. மின் அகராதி
  6. வலைப் பூக்கள்
  7. விக்கிப்பீடியா - தமிழ் நிரலிகள்
  8. மின் வணிகம்
  9. இயற்கை மொழிப் பகுப்பாய்வு
  10. மொழிக் கொள்கை, கல்வெட்டுத் தமிழ், பேச்சுத் தமிழ் – தொழில் நுட்பத்தின் பங்கு

வெளி இணைப்புகள்தொகு