நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி நகரில் இருக்கும் இந்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன.
பத்து நாட்கள்
தொகுஇக்கண்காட்சி பத்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றனர். இந்த அரங்கில், இலக்கிய உரைகள், மாயாஜாலம், மெல்லிசை, பட்டிமன்றம், நகைச்சுவை நாடகங்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப் பெறும். இந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர், ஒரு புத்தக வெளியீட்டாளர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினால் பாராட்டிச் சிறப்பிக்கப்படுவர். தினமும் புதிய நூல்கள் வெளியிடப்படும். நெய்வேலி படைப்பாளிகளின் குறும் படங்கள் திரையிடப்படும்.
சிறப்பு வசதிகள்
தொகு- இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினரால் அருகிலுள்ள நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- இங்கு வந்து செல்பவர்கள் இணையப் பயன்பாடு, தொலைதொடர்பு வசதிக்காக இந்திய தொலைதொடர்பு நிறுவனத்தின் மூலம் தொலை தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
2012 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி
தொகு2012 ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அரங்கில் 29-06-2012 ல் தொடங்கி 08-07-2012 அன்று முடிவடைந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ நெய்வேலியில் 10 நாள் புத்தகக் கண்காட்சி ஐகோர்ட் நீதிபதி நாளை துவக்கி வைக்கிறார் (தினமலர் - செய்தி)
வெளி இணைப்புகள்
தொகு- Neyveli Book Fair - 2012 பரணிடப்பட்டது 2012-05-06 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2012-05-06 at the வந்தவழி இயந்திரம் (PDF)