ச. இளங்கோவன்
ச. இளங்கோவன் (பிறப்பு: மே 20, 1948) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சேலத்தில் பிறந்த இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்திருக்கிறார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இதய இயல் பிரிவின் துறைத் தலைவாரகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய "இதயநலம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.