ப. சோழநாடன்

ப. சோழநாடன் (பிறப்பு: அக்டோபர் 16, 1962) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் ப. திருநாவுக்கரசு. பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்களில் புனைப்பெயரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். ”நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை வரலாறு”, “இண்டர்நெட் உலகில் தமிழ் - தமிழன் - தமிழ்நாடு” போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "கொடுமுடி கோகிலம் கே. பி. சுந்தராம்பாள் வரலாறு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சோழநாடன்&oldid=3614074" இருந்து மீள்விக்கப்பட்டது